22 நவ., 2021

நூல் நயம் : காதலெனும் வானவில் : வாஸந்தி

RMID110
141/100+புத்தகம்: 
காதலெனும் வானவில்.
ஆசிரியர்: வாஸந்தி
பக்கம்: 224
Kindle unlimited

 பெற்றவர்களின் தேவையில்லாத  பயமும்  பிள்ளைகளின்  மேல்உள்ள நம்பிக்கையற்ற தன்மையும் அவர்களின் மனதையும் பிள்ளைகளையும் நோகச் செய்து விடுகிறது.

 அமெரிக்காவில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்து  குடியேறும் சீனிவாசன் சுஜாதா தம்பதிகள்  தங்கள் மகளும் மகனும் இங்கு சிரமப்படுவதை  பார்த்து வருத்தப் பட்டாலும்  உனக்காகத் தான் இங்கு வந்தோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபப் படுகிறாள் மீரா .
 
  பள்ளிக் கூடத்திலும் தடுமாறுகிறாள் இந்திய சூழலுக்கு பழக . ஆசிரியை மைதிலி அவளை தேற்றுகிறாள். அவள் வீட்டிற்கு அழைத்துப் போக அங்கே. பார்வையற்ற ஹரியின் நட்பு மீராவிற்கு வேறொரு உலகத்தைக் காட்டுகிறது.

இருவரும் நட்பை வளர்க்கிறார்கள். இவளின் உடன் படிக்கும் மீனாட்சியின் நடவடிக்கையும்,  நந்தினியின்  நடவடிக்ஙையும் இவளுக்கு விந்தையாகவே தோன்றுகிறது.

  இவர்களின் அத்தைப் பாட்டியும் தாத்தாவும்  இவளுக்கு நிறைய விசயங்களை புரிய வைக்கிறார்கள்.‌
  
   அவர்களின் மகன் காதல் திருமணம் செய்ததால் அவர்களோடு தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். 
 அம்மாவை கேள்வியால் துளைக்கிறாள்.
 
    அது இந்த கலாச்சாரம் .உனக்கும் புரியும் போக போக என்கிறாள் குழப்பமே மிஞ்சுகிறது. 
     ஹரியிடம் மிக நெருங்கி பழகுவதால்  சீனி வாசனுக்கு பயம் .ஒரு வேளை அவனை காதலிக்கிறேன் என்று வந்து நிற்பாளோ?

 அவனை பற்றி விசாரிக்கவே மீராவிற்கு கோபம் வருகிறது.
  பாட்டியின் மகனும் மருமகளும்  இவர்களின் வீட்டிற்கு வருகிறார்கள்.
    கோபம் தீர்ந்து விட்டதா ? என்ற மீராவின் கேள்விக்கு யசோதாவின் பதில்.
     அவர்களின் மேல் குற்றம் சொல்ல முடியாது.அவர்களின் கலாச்சாரம் ஆச்சாரமும் அதுமாதிரி என்கிறாள்.
     
     பரத நாட்டிய ஆசிரியை  திருமண வயதை கடந்தவள் .தன் பழைய காதலரை திருமணம் செய்துக் கொள்கிறாள். மற்றவர்கள் இதை கிண்டலாக பார்க்கிறிரார்கள்.‌இதிலென்ன இருக்கிறது .காதல் எந்த வயதில் வந்தால் என்ன?  தோழமைக்காய் வரக்கூடாதா?..மீராவால் புரிந்துக் கொள்ளவே முடிவதில்லை இங்குள்ளவர்களின் பேச்சுகளை.
      
மீனாட்சியுடன்  பார்ட்டிக்குச் சென்று அங்கு சூழல் சரியில்லாததால் தப்பித்து வருகிறாள்.
தாயிடம் கூறுகிறாள்.
 
      வம்பு பேசும் ஆட்கள் பேசிக்கொண்டு தானிருப்பார்கள். மீரிவிற்கு இங்குள்ளவர்களின் பேச்சும் நடவடிக்கையும் வினோதமாகவே தோன்றுகிறது. 
      இவள்  குறிப்பாக அயன் செய்பவரை பாய் பிரென்ட் என்று சொல்வது சுஜாதாவை கலவரப்படுத்துகிறது.  இங்கெல்லாம் அப்படி சொல்ல முடியாது.
      எங்கிருந்தால் என்ன? பாய்பிரன்ட் என்று சொல்வதில் என்ன தவறு?
      மைதிலி தேர்வு முடியும் வரை ஹரியைப் பார்க்க வரவேண்டாம் எனபதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மீரா தேர்வு முடிந்த அன்று ஹரியை நினைத்துக் கொண்டே வருபவள் அவனே இவளைத் தேடி வந்ததை ஆச்சர்யமாக நினைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.
      
      அங்கே வீட்டில் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் .
      ‌தாயின் சாடல் இவளுக்கு வருத்ததை தருகிறது . மருத்துவ மனையில் சேர்த்து விட மறுநாள் தந்தையை பார்க்கச் செல்கிறாள். இவளிடம் மனம் விட்டு பேசுகிறார். உங்களை வைத்துக் அமெரிக்க 
      கலாச்சாரத்தில் உங்கம்மாவால் இருக்க முடியாது அதற்காகத்தான் நான் இந்தியாவிற்கே வந்தோம்.
      நீ தான் அம்மாவையும் தம்பியையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவளுக்கு பொறுப்பை உணர்த்துகிறார்.
       தந்தைக்கு ஆறுதல் கூறும் மீரா தன் அமெரிக்க நண்பனையும் ஹரியையும் சமமாக வைத்துப் பார்க்கிறாள். தான் அமெரிக்கன் யூனிவர்ஸிட்டியில் தான் படிக்கப் போவதாக தந்தையிடம் ஏற்கனவே சொல்லி விடுகிறாள்.
       
        தந்தை இறந்ததும் யசோதா மூலமாக. ஹரியை காதலிக்கிறாளா என்பதை தெரிந்துக் கொள்கிறாள் சுஜாதா. நட்பு மட்டும் தான் என்பதை உறுதி படுத்திக் கொள்கிறாள். ரிசல்ட்டை ஹரி தான் போன் மூலமாக தகவல் சொல்கிறான் ஆல் இண்டியா ரேங்க் வாங்கியிருப்பதாக.
        
         பள்ளிக்குச் சென்று மைதிலியை சந்திக்கிறாள். உன் தந்தையின் எதிர்பார்ப்புகள் நிறைய என்கிறாள் மைதிலி..
          ஓ அப்பா இவர்களைப் பார்த்து பேசியிருக்கிறார். 
          
 அம்மா.... உனக்கு அமெரிக்கன் யுனிவர்ஸிட்டியில் இடம் கிடைத்தால் அனுப்பச் சொல்லி அப்பா சொன்னார். நாங்கள் இருவரும் இங்கு பார்த்துக் கொள்வோம் நீப் போய் படி என்கிறாள்.
 
  ஹரியை சந்தித்து விசயத்தைக் கூறி நான் வருவதற்குள் நல்ல பெண்ணைப் பார்த்து காதல் செய் என்கிறாள் .
   காதல் ஒரு முறை தான் வரும் அது உதிர்ந்து விட்டது
   
 "மறுபடி பூக்கும். ஒரு தடவைதான் காதல் பிறக்கும் என்கிற சித்தாந்தத்திலே எனக்கு நம்பிக்கையில்லே. வேற நல்ல பெண் கிடைப்பா. உன்னைப் பூரணமாய்ப் புரிஞ்சுக்கிறவளா, காதலிக்கிற பக்குவம் உள்ளவளா- அதுக்கும் பக்குவம் வேணும் ஹரி"
 
 ஒரு வேளை மீராவுக்கேக் கூடச் அந்த பக்குவம் வரலாம்
 
  வானில் தெரியும் வானவில்லை
   அவனுக்குச் சொல்ல நினைத்துச் சொல்லாமலே 
   கிளம்புகிறாள்..

நன்றி :
திருமதி வாஸந்தி, 
Ms சுகந்தி, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: