🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
சூரியின் நாட்குறிப்பு-78:
உடல் தானம்
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
அருமை நண்பர் கவிஞர் ஜனநேசன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தேன்.
அவர் உயிருடன் இருக்கும்போதே தான் மறைந்தபின் தனது உடலை தானம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்திருந்தார் என்பது தற்போது தெரிய வருகிறது. அதன்படியே அவரது ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றியதாக அறியும்போது மனம் நெகிழ்கிறது. இறந்த பின்னும் அவர் ஒரு லட்சிய மனிதராக நம் மனதில் வாழ்ந்து வருகிறார்.
இத்தருணத்தில் உடல்தானம், உடல் உறுப்பு தானம் பற்றி தேடிப் பார்த்ததில் கிடைத்த சில தகவல்களை மட்டும் இங்கே பதிவிட்டு உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
*முதலில் Google AI Overview:*
உடல் தானம் என்பது, இறந்த பிறகு ஒருவரின் முழு உடலையும் அல்லது உறுப்புகளையும் தானம் செய்வதாகும். இது ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக செய்யப்படுகிறது.
*உடல் தானம் பற்றிய தகவல்கள்:*
உடல் தானம் செய்பவரை நன்கொடையாளர் என்பார்கள்.
உடல் தானம் செய்வதன் மூலம், பலரின் வாழ்க்கை மேம்படுத்தப்படுகிறது.
உடல் தானம் செய்வதற்கு பொதுவாக செலவு இல்லை.
உடல் தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும்.
*உறுப்பு தானம் பற்றிய தகவல்கள்:*
உறுப்பு தானம் செய்வதன் மூலம், ஒருவரின் உயிரைக் காப்பாற்றலாம் அல்லது மாற்றலாம்.
உயிருடன் இருக்கும்போது சில உறுப்புகளை தானம் செய்யலாம், இது உயிருள்ள உறுப்பு தானம் என்று அழைக்கப்படுகிறது.
உறுப்பு தானம் செய்வதன் மூலம், பலரின் வாழ்க்கை மேம்படுத்தப்படுகிறது.
*அடுத்து விக்கிப்பீடீயாவிலிருந்து கொஞ்சம்:*
1948 இல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடற்கூறியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது உடல்களை நன்கொடையாளரால் தானம் செய்ய அனுமதிக்கிறது மற்றும் 48 மணிநேர காலக்கெடுவிற்குள் ஒருவரின் உடலுக்கு உரிமை கோரப்படாவிட்டால், உடல்களை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக கோரலாம். அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் நன்கொடைகளுக்கு உடல்களை ஏற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ், ஹெபடைடிஸ் (ஏ, பி மற்றும் சி), தானம் செய்யப்பட்ட உறுப்புகள், தீவிர பிஎம்ஐ அல்லது தோல் நோய்கள் உள்ள உடல்கள் ஆகியவை பொருத்தமானதாகக் கருதப்படாத நன்கொடைகளில் அடங்கும்.
*கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதி பாசு மற்றும் ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் போன்ற சில தலைவர்கள் தங்கள் உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளனர்*. இப்போதெல்லாம், இந்தியாவில் உள்ள பலர், இரண்டு சாட்சி கையொப்பங்களுடன் உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட்டு இறந்த பிறகு தங்கள் உடலை தானம் செய்கிறார்கள்.
*இறுதியாக சூரியன் எஃப்.எம்மிலிருந்து கொஞ்சம்*
நாம் இயற்கையாக மரணித்தால் நம் உடலிலிருந்து கண்கள், இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், நரம்புகள் உள்ளிட்டவற்றை தானம் செய்வார்கள். அதுமட்டுமின்றி உடல் தானம் செய்தவர்களது உடல் மருத்துவ மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவும், உடற்கூறாய்வு ஆராய்ச்சி மற்றும் இன்னும் சில ஆராய்ச்சிகளுக்கும் உதவுகிறது.
நம் உடலை நாம் தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கு சென்று அதற்கான படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து, அதற்கு தேவையான சான்றிதழ்களை கொடுத்து கையொப்பம் இட்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக இதை நம் வீட்டில் கூற வேண்டும். தமிழகத்தில் இறக்கும் முன் உடல்தானம் செய்தவர்களின் இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதையுடன் நடைபெறும். இதுவே அரசு தரப்பிலிருந்தும், மக்கள் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் உரிய அங்கீகாரம்.
நன்றி, வணக்கம்🙏
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக