21 ஜன., 2025

கவிதை நேரம்

இக்கவிதைகள் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு/ அம்மாக்களுக்கு சமர்ப்பணம்.  அவர்கள் தன் மகளின் சுண்டுவிரல் பிடித்து பயணம் செய்வார்கள்.  

கவிதை 1

"ஒவ்வொரு
இரவும்
தூங்கும் மகளின்
முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்
தியானம் என்று
தனியாக எதுவும்
செய்வதில்லை"


கவிதை 2

"அவசரத்தில்
பொட்டு வைத்துப் போனாள்
மகள்
அதற்கு நேராக
என் புருவங்களை
நகர்த்திக் கொண்டேன்"

கவிதை 3

"குவளை நீர் முழுவதும்
சிந்திவிட்டாலும்
மகள்
கொண்டு வந்ததில்
என் தாகம் தீர்ந்தது"

கவிதை 4

"மகளின் 
பாதங்களால் 
நிறைகிறது 
என் வீடு"

கவிதை 5

"நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும் போது
தூங்கிவிட்டாள் மகள்
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
எழுந்துவிடுவாள் என"

கவிதை 6

"வீட்டின் பூசை அறையில்
கை கூப்பி நிற்கிறாள்
இருக்கக்கூடும்
கடவுளுக்கும் சில வேண்டுதல்கள்"

_______________________

~ நூல்: மகளதிகாரம் 
~ ஆசிரியர்: ஆண்டன் பெனி
~ பக்கங்கள்: 102
~ கிண்டில் வாசிப்பு

கருத்துகள் இல்லை: