நவீனத் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும் சாகித்திய அகாதெமி விருதாளருமான பூமணி மறைந்தார்.
கி. ராஜநாராயணன் அறிமுகப்படுத்திய கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சியாக எழுத்துலகில் புகுந்தவர் பூமணி. எனினும் அந்தக் களத்தில் முன்னத்தி ஏர் என்று அவரே குறிப்பிட்ட கி.ரா.வைக் கடந்து கரிசல் மண்ணின் அறியப்படாத மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகவும் உயிர்ப்போடும் சித்தரித்தார். அவரது சிறுகதைகளும் நாவல்களும் அந்தக் கருமண் நிலத்தின் ஆன்மாவை நவீனத் தமிழுக்குக் கொடையாக அளித்தன. தமிழில் தலித் இலக்கியத்தின் ஆரம்பப் படைப்புகள் பூமணியுடையவை. அவற்றைத் தலித் எழுத்து என்று வகைப்படுத்த முடியாத விதத்தில் மானுடச் சிக்கல்களைப் பேசும் இலக்கிய ஆவணமாக மாற்றியவர் அவர். 'பிறகு' நாவலின் அழகிரிப் பகடையும் 'வெக்கை' நாவலின் செலம்பரமும் அவர் தமிழ்ப் புனைவிலக்கியத்துக்கு வழங்கிய ஜீவனுள்ள கதைமாந்தர்கள். அந்தப் பாத்திரங்கள் அழியாதவை. அவர்களை உருவாக்கிய பூமணியும் அழிவற்ற கலைஞர்.
பூமணிக்குக் காலச்சுவடின் புகழ் அஞ்சலி.
#பூமணி #Poomani #பூமணிமறைவு #எழுத்தாளர்பூமணி #PoomaniWriter #கரிசல்இலக்கியம் #வெக்கை #பிறகு #Asuran #தமிழ்இலக்கியம் #தமிழ்ப்புனைவிலக்கியம் #தலித்இலக்கியம் #கரிசல்மண் #தமிழ்எழுத்தாளர் #சாகித்தியஅகாதெமி #காலச்சுவடு #கண்ணீர்அஞ்சலி #rippoomani
@followers @highlight Kannan Sundaram TopFans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக