4 நவ., 2014

எனக்குப் பிடித்த கவிதை-76: வலை - பிரமிள்



வலை - பிரமிள்



மாலைக் கதிர் வாள் வெட்டு
பரிதிப் புறாத் துடிப்பு
நெஞ்சின் பால் வெளiயில்
பாலைத் தகட்டுப்
படபடப்பு.
நடை தளர்ந்தது.
இது எல்லை?
ஊத்ந்த தொடர்ந்த நிழலின்
விரல் விளiம்பு.
எதிரே
நில விரிப்பு - வாழ்வு
வலை விரிப்பா? - வாழ்வா?
திரும்பிப் பார்த்தேன்.
தசைத்திரள் உருகி வழிந்து
தார் பாறையாக நீண்டு
வான் கடல் படுகைத்
தொடுவான் வரை கிடந்த
நிழலின் இழிப்பு.
கால் விரல் கண்ணியில்
நான்.

நெல்லையப்பன் கவிதைகள்-87: பகுத்தறிவு



பகுத்தறிவு


அகால மரணமடைந்த
பகுத்தறிவுப் பகலவனை
புதைப்பதா, எரிப்பதா
என தொண்டர்படை
இரண்டுபட,
கட்டவிழ்ந்த வன்முறையில்,
உயிருடன்-
புதைக்கப்பட்டனர் மூவர்
எரிக்கப்பட்டனர் ஐவர்.

ஆன்மீக சிந்தனை-59:



தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனந்தரும்
தெய்வ வடிவம் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனந்தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
நலம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே!

இன்றைய சிந்தனைக்கு-186:



தோல்வி என்பதை ஒருபோதும் அறியாதது அன்பு ஒன்றுதான்.

நலக்குறிப்புகள்-90: நெல்லிக்காய்



நெல்லிக்காய்

தினமும் ஒரு முழு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால்,  நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  சளித்தொல்லை இருக்காது.  சருமமும் ஜொலிக்கும்.  இதில் ஆன்டி- ஆக்சிடெண்டுகள் இருப்பதால், வயதானாலும் சருமம் அத்தனை எளிதாக சுருங்காது. இதனால் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும்.  இதயம், கண்களுக்கு நல்லது.  எளிதில் கொழுப்பைக் குறைப்பதால், எப்போதும் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.  ஒன்றுக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிட்டாலும் ஆபத்து எதுவும் இல்லை -   

ஆனந்தவிகடன்  24.10.12