20 பிப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-95:

பக்தியினால் கல்வி, கலைகள் யாவும் வளரும். கருதிய செயல்கள் யாவும் கைகூடும். நெஞ்சில் தைரியமும், வீரியமும் உருவாகும். அல்லல் தீரும். நல்ல ஆண்மை உண்டாகும். அறிவு தெளிந்து ஞானம் கைகூடும். சொல்லும் சொற்கள் வேதம் போல பயனுடையதாக இருக்கும். மெய்யான வல்லமை தோன்றும் - மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்

நன்றி: தினமலர் (ஆன்மிகம் அறிவோமா, 24.10.2010)

யோக சித்தி-10: உள்ளபொருள்-5

விழிமின் எழுமின் உள்ளே விண்ணரசைக் கண்டு
செழிமின் சச்சித் தானந்தம்.

மாய மன உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! உட்கண்ணைத் திறங்கள். மன அகந்தையில் மயங்கிப் பாழாகாமல் எழுந்திருங்கள். விண்ணரசு உங்களுக்குள்ளே உள்ளது. அதை ஆத்மா தியானத்தால் கண்டு சச்சிதானந்தச் செழிப்பெய்துங்கள்!

19 பிப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-94:

சிந்தனாசக்தியின் பெரும் பகுதியினை மனிதன் வீணாக்கி விடுகிறான். தொடர்ந்து பெரிய தவறுகளையும் செய்துகொண்டே போகிறான். ஆனால், சரியான பயிற்சியும், முயற்சியும் கொண்டவன் மனமோ ஒருபோதும் தோற்பதில்லை - சுவாமி விவேகானந்தர்.

யோக சித்தி-9: உள்ளபொருள்-4

அருளாலே உள்ளத்து அறிவாய் இலங்கும்
பொருளாலே இன்பப் பொலிவு.

பாச அன்பை மாற்றி மாசற்ற பதியன்பாக்கி, மனத்தைப் புறஞ்செல்லாது உள்ளிழுத்துத் தியானத்தில் நிறுத்தலே உள்ளிறைவனை அறியும் வழி. ..பதியன்பின் தீவிரத்தால் எய்தும் அருளுணர்வால் உள்ளத்தில் அறிவாக, ஞானமயமாக ஒளிரும் சுத்தான்ம வஸ்துவால்தான் பேரின்பம், ஆத்ம சுகம் பொலிவாகும்; விளங்கும்.

18 பிப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-93:

வாழ்க்கை என்பது எடுப்பதற்காக அல்ல; கொடுப்பதற்காகத்தான் என்பதை அனைவரும் உணரவேண்டும். அவற்றுக்கு ஆறு அடிப்படை விஷயங்கள் உண்டு.

1. வாழ்வின் இன்பத்தை அடைய வேண்டும்.

2. எதற்கும் முயற்சி அவசியம்.

3. முயற்சியை அடைவது அதனினும் அவசியம்.

4. அடைதலைக் காப்பது

5. காத்தலை அனுபவிப்பது

6. அனுபவித்தலை பகிர்ந்தளிப்பது

மேற்கண்ட ஆறு அடிப்படை விஷயங்களை எவனொருவன் கடைப்பிடிக்கிறானோ அவனது வாழ்க்கையே நிறைவானது என வேதங்கள் வலியுறுத்துகின்றன.

- தமிழருவி மணியன்

நன்றி: தமிழருவி மணியன் & இனிய உதயம், ஜனவரி 2010

யோக சித்தி-8: உள்ளபொருள்-3:

ஐந்கொட்டைக் குள்ளே அரசாளு மன்னவனை
ஐந்தடங்கியன் பால் அறி.

அன்னம், பிராணம், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்னும் பஞ்சகோசக் கோட்டைக்குள் தானேதானாக நின்று இக்காயாபுரியை ளுகின்ற சுத்தாத்மராஜனை, ஐம்புலன்களும் புரஞ்செல்லாது அடங்கி, தூய உள்ளன்பால் அறிக.

17 பிப்., 2010

சூரியின் டைரி-6: "ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?"

அண்மையில் என் தந்தையாரின் வருட திதிக்காக என் தம்பி திருச்சியிலிருந்து வேஷ்டி, துண்டு வாங்கி வந்தான். அந்த நேஷனல் வேஷ்டியின் அழகான பேக்கிங்கை பிரித்தபோது, வேஷ்டியைச் சுற்றியிருந்த அழகான வண்ண அட்டையின் உட்புறத்தில் பயனுள்ள செய்தியைக் கண்டேன். தெளிவாக, வண்ணத்தில் அச்செய்தி அச்சிடப்பட்டிருந்தது: "ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?"

எனக்கு எப்போதுமே இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வதில் நாட்டமுண்டு. சொல்லப்போனால் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்ற தலைப்பில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஒரு ஒருநாள் கருத்தரங்கே நடத்தினோம். அதில் இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, இயற்கைக் கல்வி போன்ற பல தலைப்புகளில் திரு கோ.நம்மாழ்வார் போன்ற பல விற்பன்னர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பை நல்கினர். அனைவருக்கும் இலவசமாக இயற்கை உணவு வழங்கப்பட்டது. எனவே நேஷனல் வேஷ்டிகள் நிறுவனத்தின் இந்த சேவை மனப்பான்மையோடு வெளியிடப்பட்டிருந்த குறிப்பை நான் பெரிதும் ரசித்தேன். அக்குறிப்புகளை இங்கே உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?

* இரசாயன உறங்களாலும், பூச்சிக்கொல்லி நஞ்சுகளாலும் விளைநிலங்கள் வளம் இழந்தன.

* உழவர்கள் கடனாளிகலாக்கப்பட்டு, தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

* குடிக்கும் நீரும், தைப்பாளும்கூட நஞ்சானது.

* உண்ணும் உணவு நஞ்சானது. உண்பவர்கள் நோயாளியாக ஆனார்கள். உண்ணும் உணவு நன்ஜானதால் இருதய நோய், புற்று நோய், சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் பெருகிவிட்டன.

* இரசாயன வேளாண்மையால் புவி வெப்பம் (Global Warming) உயர்ந்து சுனாமி, பூகம்பம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்துவிட்டன.

* ஆண்மை, பெண்மைக் குறைபாடுகள், மலட்டுத்தன்மை பெரிதும் அதிகரித்துள்ளது.

* உணவிற்காக ஒரு குடும்பம் செலவிடும் தொகையைவிட மருத்துவத்திர்காகச் செலவிடும் தொகை அதிகரித்துள்ளது.

மாறாக

* இயற்கை சார்ந்த வேளாண்மையால் நிலவளம் உயர்கிறது.

* நஞ்சில்லா உணவு கிடைப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

* வருங்கால சமுதாயத்திற்கு நலவாழ்வு உறுதி செய்யப்படுகிறது.

* சுற்றுச்சூழல் பேனப்படுதலும், பல் உயிர் பெருக்கமும் (Biodiversity) நிலைத்த வாழ்விற்கு அடிப்படைகள்.

* இயற்கை வேளாண்மை பூமியை குளிர்விக்கிறது. பருவகால முரண்பாடுகள் சமன்படுகின்றன.

* இயற்கை வேளாண்மை முறையில் விளைந்த உணவு (Food obtained from Organic Farming) நஞ்சில்லா உணவு, இயற்கை உணவு, சத்தான, சுவையான, பாதுகாப்பான உணவு.

- கோ.நம்மாழ்வார்

இயற்கைக்குத் திரும்புங்கள், அல்லது திருப்பப் படுவீர்கள்.

- மாசானபு புகோகா

நன்றி: நேஷனல் காட்டன் வேஷ்டிகள் & சர்டிங்ஸ்,
திரு கோ.நம்மாழ்வார் மற்றும் திரு.சானபு புகோகா.

யோக சித்தி-7: உள்ள பொருள்-2

பலர் பற்பலவாகப் பாரிற் பகர்வர்
உளனொருவன் என்றே உணர்.

உலகம் பழகுன விரிவு. பல சமயத்தார், பல கொள்கையால் தத்தமது மனப்போக்கின்படி, பல பான்மையாகச் சொல்லுவர். அனைத்துள்ளும், புறமும் தானே தானாகத் தாக்கற்றிருக்கும் மெய்ப்பொருள் ஒன்றே என்றறிக.

இன்றைய சிந்தனைக்கு-92:

அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மேல் நம் வாழ்க்கை என்னும் கட்டிடம் நிலைபெற்று நிற்கிறது - சுவாமி விவேகானந்தர்

16 பிப்., 2010

யோக சித்தி-6: உள்ள பொருள்-1:

பெயர் வடிவாதியதோர் பேதங் கடந்த
உயர்பொருள் ஒன்றுண்டென்று உணர்.

பலபல பெயர்கள், பலபல வடிவுகள் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி, இவற்றிற்கெல்லாம் அப்பால் ஒரு உயர்ந்த பரம்பொருள் உள்ளதென்று உட்குவிந்து உணர்க.