ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,
அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி,
மோதியிணைந்த இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,
மூலகங்கள் பலவாகி, அவை இணந்து,
பேதித்த அண்ட கோடிளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,
நீதிநெறி உணர் மாந்தராகி, வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
*இறைநிலை என்பது பெருவெளியே*
இறைநிலையே தன்னிறுக்க சூழ்ந்தழுத்தம் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும் நுண்விண்ணாம்:
நிறைவெளியில் விண்சுழல, நெருக்குகின்ற உரசல்
நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்!
மறைபொருளாம் காந்தம் தன் மாத்திரைகள் ஐவகை
மலைக்காதீர்! விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்:
முறையாய் அக்காந்த அலை மனமாம் உயிர் உடல்களில்:
மதிஉயர்ந்து இவ்வுண்மை பெற மாபிரம்ம ஞானமாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக