25 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு தந்து அசத்தும் திருச்சி பாலாஜி ஹோட்டல்...!
இரண்டு அவித்த முட்டைகளின் விலை 1700 ரூபாய்... இது போன்ற ஓட்டல்களும் நம் நாட்டில் உண்டு...
அதே நேரத்தில் 25 ரூபாய்க்கு தரமான முழுச் சாப்பாடு தரும் உணவகங்களும் தமிழ் நாட்டில் இருக்கிறது...
வயிறார ஒருவர் முழு சாப்பாடு சாப்பிட, பெருநகரங்களில் குறைந்தபட்சம் 90 ரூபாய் தேவை. அதிகபட்சமாக 250 ரூபாய்க்கு கூட மதிய சாப்பாடு கிடைக்கிறது. களம் அப்படி இருக்க 25 ரூபாய்க்கு முழு சாப்பாடு தருகிறது, திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டல்.
திருச்சி மாநகராட்சிக்கு எதிரே உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் பின்புறத்தில், 13ஆண்டுகளாக உணவகத்தை நடத்தி வருகிறார் பாலாஜி. ஓட்டலில் டீ, காபி 5 ரூபாய்க்கும், சாப்பாடு 25 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார் பாலாஜி.
வெளியூர்களிலிருந்து திருச்சிக்கு வந்து பணிபுரியம், படிக்கும் இளைஞர்களுக்கு பாலாஜியின் ஹோட்டல் பூமியில் இருக்கும் ஒரு சொர்க்கம் போல என கூறலாம்.
25 ரூபாய்க்கு சாப்பாடு எப்படி லாபம் இல்லாமல் என்ற கேள்வி எழலாம். ஆனால் 25 ரூபாய்க்கு முழு சாப்பாட்டை விற்பனை செய்தாலும், தனக்கு லாபமே கிடைப்பதாக கூறுகிறார் உரிமையாளர் பாலாஜி.
ஒரு வருட காலமாக பாலாஜியின் ஹோட்டலில் சாப்பிடும் தனக்கு, எந்த உடல்பாதிப்பும் இல்லை என்றும், மலிவு விலை என்பதற்க்காக, தரம் எந்த அளவிலும் குறையவில்லை என்கிறார், செல்வராஜ் என்னும் முதியவர்.
லாபத்தின் உயரத்தை குறைத்து, சக மனிதனின் பசி போக்கும் இவரைப் போன்றவர்கள் அரிதிலும் அரிதான மனிதர்களே👌👌👏👏💐💐
அனைவரும் பாராட்டி பகிருங்கள் நண்பர்களே🙏🙏🙏
நன்றி : கனவுகளும் காயங்களும், புதிய தகவல்கள் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக