எழுத்தாளர் நகுலன்
#நகுலனதிகாரம்
நகுலனின் படைப்புகளுக்குள் என்னை அவ்வபோது ஒப்புக் கொடுத்தவள் நான். நகுலனைப் படிப்பதற்கென்றே சில சட்டதிட்டங்கள் உண்டு என்றும் அவரை புரிந்து கொள்வது கடினம் என்றும் கூறப்படுவதை முற்றிலுமாக மறுக்கிறேன். அவர் ஓர் அழகிய அதிகாரம். (இரு பொருளிலிலும்). தமிழும் மனித உணர்வுகளும் உங்களுக்கு புரியுமென்றால் நீங்கள் நகுலனை வாசிக்க ஆரம்பிக்கலாம்.
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.
தகப்பன் பிறந்தநாள் இன்று.
#நூற்றாண்டு
நன்றி : Ms ரெ விஜயலட்சுமி, நகுலனதிகாரம் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக