11 செப்., 2020

கொரோனா தடுப்பூசி பாதகமா?ஆனாலும் நாங்க இந்தியாவில் தொடர்வோம் !

கொரோனா தடுப்பூசி பாதகமா?
ஆனாலும் நாங்க இந்தியாவில் தொடர்வோம் - சீரம் இன்ஸ்டிட்யூட், பிரபல இந்திய தடுப்பூசி நிறுவனம். 

Dr. கோ. பிரேமா MD(Hom),

என்னமோ தடுப்பூசி பாதகம் புதுசு மாதிரி!

பரிசோதனைகள் முழுமையடையாமல் இந்திய அரசு தடுப்பூசி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற HPV தடுப்பூசி பரிசோதனையில் பழங்குடி பெண்குழந்தைகளின் மரணம், 2009ல் இந்திய பாராளுமன்றத்தையே உலுக்கியதே, யாருக்காவது நினைவிருக்கா? 

பல ஆண்டுகளாக முறையான அத்துனை பரிசோதனைகளும் முடிந்தும் அரசு பரிந்துரையில் சேர்க்கப்பட்ட , dpt தடுப்பூசிக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட pentavalent தடுப்பூசி மரணங்கள் ஆண்டு தோறும் 8000 மரணங்கள் வரை இருக்கக்கூடும் என்றும் இது dpt  தடுப்பூசியின் மரணங்களை விட இரண்டுமடங்கு என்றும் ஒரு மருத்துவக்குழுவின் தொடர் எச்சரிக்கையையும் , இதை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்ற அறைகூவலையும் மீறி தொடர்ந்து இந்த தடுப்பூசி அரசு மற்றும் தனியாரால் படு ஜோராக குழந்தைகளின் உயிரைக்குடித்து வருவது என்ன புதிதா?

ரோட்டாவைரஸ் எனும் கிருமியினால் வயிற்றுப்போக்கில் ஏற்படக்கூடும் இறப்பைவிட எந்த விதத்திலும் குறைவில்லாமல் இதற்காக அரசு தடுப்பூசி பரிந்துரையில் சேர்க்கப்பட்ட ரோட்டாவேக்ஸ் தடுப்பூசி குடல் ஒட்டு எனும் தீவிரப்பாதகத்தினால் ஏற்படுத்தக்கூடும் மரணங்கள் ஒத்துப்போவதை சுட்டிக்காட்டி, இந்த தடுப்பூசியையும் இந்திய அரசு தடை செய்யவேண்டும் என ஒரு மருத்துவர் தொடர்ந்த வழக்கு இன்றும் இலுவையில் உள்ளதே, இதென்ன பிரமாதம்?

போலியோ சொட்டுமருந்தாலேயே போலியோ போன்ற பக்கவாதத்தால் முடமான குழந்தைகளின் எண்ணிக்கை 2000-2017ல் மட்டும் 4.91 லட்சம் என்கிறது ஒரு ஆய்வு. 
ஆய்வில் வந்த கணக்கு இது. வராதது 
இன்னமும் எத்தனையோ?

நூற்றாண்டுகளாக நோய் தன்மை நன்கு அறிந்த டெங்குவிற்கு , 4ஸ்டெரியின் மட்டுமே உள்ள டெங்கு கிருமிக்கு(புதிய ஐந்தாவது இன்னமும் தடுப்பூசியில் சேர்க்கப்படவில்லை, இதற்கு மேலும் சில ஆண்டுகள் தேவை), 20 ஆண்டுகளாக கடும் ஆய்வுகள், 30000 குழந்தைகளில் பரிசோதனையில் பாதுகாப்பனது பலனளிப்பது என உறைதிசெய்யப்பட்ட டெங்கு தடுப்பூசி , பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிக்குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தில் அறிமுகப்பட்டபோது, ஒன்றரை ஆண்டுகளில் 8 லட்சம் குழந்தைகளில் 750+ மரணங்களையும்,1200+ தீவிர சிகிச்சையும்,2500+ நாட்பட்ட மருத்துவமனை சிகிச்சையும் என அமளிதுமளியானது கொரோனா நாடகக்காலத்தில் ஊடகங்களால் மறைக்கப்பட்ட கதையானதே?

தட்டம்மை உட்கூறாக இருக்கும் தடுப்பூசிகள் அனைத்துமே, தீவிரமான மூளை நரம்பியல் மண்டலத்தை பாதிக்கும் பாதகத்தை மறக்கலாமா?

ஃப்ளூ தடுப்பூசி அமெரிக்காவில் அதிகமான வழக்குகள் மற்றும் அதிக இழப்பீடு கோரப்பட்டும் தடுப்பூசி என பெயர் பெற்றது தானே?
இந்த ஃப்ளூ தடுப்பூசியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான  36% அதிக வாய்ப்பு உள்ளதே, இதை மறுக்க முடியுமா?

போங்க போங்க.. 
கொரோனா தடுப்பூசி பாதகமா பக்கவாதம் எல்லாம் ஒரு பேச்சா?

மாஸ்க் போடும் கூட்டம் அப்படியை நேரா போய் வரிசையில் நின்று குத்திக்கொள்ளவும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: