17 நவ., 2020

கருத்து மேடை : மனப்பக்குவம்

மனப்பக்குவம் எவ்வாறு நான் பெற்றேன்,,?

1. கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்து வாழ்ந்து பார்!
கல்யாணம் பண்ணியபின் தம்பி,தங்கைகளோடு
தனியாக படுக்கை அறை இல்லாத சிறு வீட்டில் அதுவும் வாடகை வீட்டில் வாழ்ந்து பார்,,

2.தம்பி,தங்கைக படிப்பு,திருமணம் என,அவர்கள்
தந்தை ஸ்தானத்தில் இருந்து கடமைகளை நீ
செய்து பார்,,

3.தந்தையார் உயிரோடு இருக்கும் போதே,உன்
தந்தை,சித்தப்பாக்களுக்கு பாகப்பிரிவினை நீ
தனியாளாக செய்து பார்,,

4.உன் மைத்துனரை நண்பராக நினைத்து,அவர்
கல்வியிலும்,கல்யாணத்திலும் தனியாளாக நீ
மாமனார் உயிரோடிருக்கும் போது செய்து பார்!

5.மாமனாரை,தந்தையாக நினைத்து,அவர் மனம்
நோகாது,பாசத்தோடு அவர் இறுதிக்காலம்வரை மகனாக வாழ்ந்து பழகிப்பார்,,

6.தந்தைஇறந்தபின்னே,தாயையும்,தாரத்தையும்
இரு கண்களாக நினைத்து,தாயின் இறுதிக்காலம்
வரை தலைமகனாய் கடமைகளை செய்து பார்,,

7.அன்புமகளுக்காக,அவள் மணமுடித்த பின்னும்
அவளின் விருப்பத்திற்காக,பேரக்குழந்தைகளின்
நலத்திற்காக,சம்பந்திகளோடு அனுசரித்து நீ
வாழ்ந்துபார்,,

8.அன்பு மகளிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து
அவளே உனது அருகிலுள்ள ஏடிஎம் என எண்ணி
அன்றாட உன் தேவைகளுக்கு,அவளிடம் பணம்
கேட்டு,வாழ்ந்து பார்,,

8.அன்பு மருமகனை,மகனாக நினைத்து,நாளும்
அவரை அனுசரித்து,இறுதிவரை வாழ்ந்து பார்,,

9.இன்று வளமாய் நீ இருக்க,இன்னல்கள் சுமந்த
உன் மூதாதையர்களை,ஆசிரியர்களையும்,
உன்னை வாழ வைக்கும் ஊர்,உலக மக்களையும்
நன்றியோடு நீ நினைத்துப்பார்,,சமுதாயமின்றி
நீயில்லை,,சமுதாயம் உனக்கு செய்ததே அதிகம்!
நீ சமுதாயத்திற்கு செய்தது மிகக்குறைவு!! என
நீ புரிந்து,சமூகத்திற்கு  உயிர்,உடல்,பொருளை
நீ அர்ப்பணித்து இறுதிவரை வாழ்ந்து பார்,,🇮🇳💕

10.படிப்பு,பணம்,பதவி,புகழனைத்தும் உன்னோடு
எதுவும் கூட வராது,,என்பதைப்புரியும் பக்குவம்
உன் மனதில் தானாக படிப்படியாக தோன்றும்,,😇
உனது ஆணவம் முழுவதுமாக அகலும்,, நீ வாழும்
உலகமே தூசி என உணர்வாய்,,? பின்னர் நீ யார்
உண்மையில் சிந்தித்தால்,சிரிப்புதான் வரும்,,🤣
அதன்பின்,மனதில்பாரங்கள் எதுவும் இருக்காது,,
அந்த சிறு குழந்தை போல வாய்விட்டு சிரிப்பாய்,,

நன்றி  :

கருத்துகள் இல்லை: