நாம் பொதுவாக திரைப்படங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் படத்தை காட்டுவதை பார்த்திருப்போம்.
அழகாக மிதக்கும் ஒரு பந்து போல காட்டப் பட்டிருக்கும்.
ஆனால், உண்மையில் நீங்கள் கற்பனை செய்ய வேண்டியது உங்கள் கண்ணெதிரே மிதக்கும் அந்த லட்டுவை சுற்றி ஒரு 50 அல்லது 100 ஈக்கள் கச்சா முச்சா என்று மொய்த்து கொண்டு இருப்பதை போல தான்.
அந்தளவு விண்வெளிக் குப்பை சேர்ந்துள்ளது நமது சுற்றுவட்டப் பாதையில் பொதுவாக ஆயுள் முடிந்த செயற்கைகோள்களுக்கு இரண்டு வகையில் முடிவு கட்டுகிறார்கள்.
ஒன்று செயற்கைக்கோள்கள் தங்கள் ஆயுள் முடித்துக் கொண்டதும்.
அவைகளின் சுற்றும் வேகத்தை குறைப்பார்கள்.. சுற்றும் வேகம் குறைந்ததும் அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஆளாகி வளி மண்டலத்திற்குள் நுழையும், அவைகள் எரிந்து கொண்டே வந்து மிச்ச மீதி துண்டு, துகள்கள் பூமியில் விழும்
அதை விழ வைப்பதற்கென்றே தனியாக ஒரு இடத்தை உலகிலேயே மிக ஆளரவமற்ற மனித நடமாட்டம் இல்லாத, ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.
அந்த இடத்திற்கு பெயர்
" The space craft semetery " அந்த இடம் தெற்கு பசிபிக்- ல் உள்ளது.
இதுதான் உலகிலேயே மிக மனித நடமாட்டம் குறைவான இடம்
பொதுவாக செயற்கை கோள்களுக்கு 25 Year Rule இருக்கிறது. அதாவது 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அது நன்றாக வேலை செய்தாலும் கூட பாதுகாப்பு காரணமாக
அதற்க்கு ரிடயர்மெண்ட் கொடுத்து விட வேண்டும்.
(அணு உலைகளில் கூட இந்த 25 Year Rule கடைபிடிக்க படுகிறது )
ஆனால், மேல் சொன்ன படி செயற்கைக்கோளின் வேகத்தை குறைத்து அதை பூமியில் விழ வைப்பது கொஞ்சம் செலவு பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். இதற்கு மாற்று ஏற்பாடாக விஞ்ஞானிகள் வேறு இரண்டாவது வழியை வைத்திருக்கிறார்கள். அது தான்
"Graveyard Orbit.. "
பொதுவாக செயற்கை கோள்கள், பூமியில் இருந்து வெவேறு உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சிலது பூமிக்கு கொஞ்சம் நெருக்கமாகவும் சிலது பூமியை விட்டு வெகு தொலைவிலும்....
உதாரணமாக விண்வெளி ஆய்வு மையமான ISS பூமியில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. அதே சமயம் "Geostationary Satellites " மாதிரியான செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலான உயரத்தில் சுற்றி வருகின்றன.
இவற்றின் ஆயுட்காலம் முடிந்த பின் இவைகளை வேகம் குறைந்து பூமிக்கு இழுபதை விட இவைகளின் வேகத்தை அதிகரித்து... இப்போது இயங்கி கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களை விட வெகு தொலைவில் அனுப்பிவிடுவது எளிதானது.
இவைகளை 36000 கிலோ மீட்டர் தொலைவு சென்று விட்டு விடுவார்கள்.
இந்த இடம் ஒரு விண்வெளி சுடுகாடு.
இந்த இடத்தை தான் "Graveyard Orbit" என்று அழைக்கிறார்கள். இறந்து போன நூற்று கணக்கான செயற்கைக்கோள்களின் பிணங்கள்.. குப்பைகள் சுற்றி திரியும் ஒரு இடம்.
இது தற்போது இயக்கத்தில் இருக்கும் செயற்கை கோள்களை விட 300 கிலோ மீட்டர் உயரம் அதிகம். கைவிட பட்ட இந்த மாதிரி செயற்கை கோள்களின் குப்பை பெல்ட் பெரிய Space Garbage ஆக மேலே சுற்றி கொண்டு இருக்கிறது.
இவைகள் எதற்கும் பூமியில் தொடர்பு கட்டுப்பாடு இல்லை. இவைகள் தான் தோன்றித்தனமாக தன் இஷ்டத்திற்கு சுற்றிக் கொண்டு இருப்பவைகள். இவைகள் அவ்வபோது மோதி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது அப்படி மோதி கொண்டால் Chain Reaction போல அடுத்தடுத்து உள்ளதை மோதி கொண்டே போகும்.
"Gravity " படத்தில் அப்படி ஒரு செயற்கை கோள் வந்து விண்வெளி வீரர்கள் ஷிப் இல் மோதுவதை போல காட்டி இருப்பதை பார்த்து இருக்கலாம்.
தற்போதைய கணக்குப்படி 1100 இயங்கும் செயற்கை கோள்களும் 2600 இயங்காத இறந்துபோன செயற்கை கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன.
ரஷ்யா அனுப்பிய ஸ்புட்னிக் 1 இருப்பதிலேயே மிகப் பழமையான செயற்கைக்கோள் கூட அங்கே இன்னும் சுற்றி கொண்டிருக்கிறது.
சரி, இதனால் ஆபத்து ஏதும் இல்லையா..?
கால போக்கில் இவைகள் சுற்றும் வேகம் குறையும் என்கிறார்கள் அப்போது இவைகள் ஒவொன்றாக பூமியை நோக்கி இழுக்க படும் என்கிறார்கள்.
ஒரு வேளை, நாளையே அனைத்தும் ஒரே நேரத்தில் இழுக்க பட்டால்.. பூமியில் நெருப்பு மழை போல அவைகள் பொழிவதை பார்க்கலாம்.
ஆனால் அவைகள் தங்கள் வேகத்தை இழந்து சுற்று பாதை குறைந்து பூமியை நோக்கி உயரம் குறைய சில நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்பதால் அதை பற்றி இப்போது கவலை இல்லை என்கிறார்கள்.
சில நூற்றாண்டுகள் கழித்து அதற்க்கான மாற்று திட்டம் சாவகாசமாக உருவாக்கி கொள்ளலாம்!
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக