21 டிச., 2020

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1008: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே.

விளக்கம்:

இறைவன் ஆட்கொண்ட அடியவர்கள், இறைவனை அடைய வேண்டி மேலும் மேலும் கர்மங்களை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள், மிகப்பெரிய சிவ யோகிகள், இறைவன் மேல் மிகவும் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள் ஆகியோர் அருச்சினை செய்ய விரும்ப மாட்டார்கள்.

குறிப்பு: நீண்ட காலம் அருச்சினை செய்து இறையருளை பெற்றவர்களும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் யோகிகளும் அருச்சினை செய்யும் அவசியம் இல்லை.

நன்றி :

கருத்துகள் இல்லை: