6 ஜன., 2021

கருணை உள்ளமே, கடவுள் இல்லமே :

நடிகர் சூர்யாவிடம் நான் டாக்டர் ஆகணும் என்று கேட்ட ஏழை சிறுவன். 10 வருடத்திற்கு பிறகு என்ன செய்கிறார் தெரியுமா .? 

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். 

அது மட்டும் அல்ல  தமிழ்த் திரையுலகில் எந்த சர்ச்சை யிலும் சிக்காத நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் சூர்யா. 

இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல             உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகின்றார். 

பல நற்பணிகளை ஏழை மக்களுக்கு செய்ய 2006  ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை.  

தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். 

நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் மருத்துவராக மாறி இருக்கிறார். 

10 வருடம் முன் தனியார் 
 தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட 
 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பையன்தான் நந்தகுமார். 

அந்தச் சிறுவன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் தான் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். 
என்னுடைய மதிப்பெண் 1160 
 எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வசதி 
 இல்லை என்று கூறி இருந்தார். 

பின்னர் கூலி வேலை பார்க்கும் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசினார். 

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறுதியளித்திருந்தார்.

         
தற்போது அவர் சொன்னது போலவே சென்னை எம்.எம்.சி மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி கொடுத்து.,

அவர் படித்து முடிக்கும் வரை அத்தனை செலவையும் சூர்யாவின் அகரம் கட்டளையை ஏற்று இருக்கிறது. 

நந்தகுமார் மருத்துவம் படித்துவிட்டு பெரம்பலூரில் ம ருத்துவராக பணியாற்றி வருகிறார். 

பத்து வருடங்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது மருத்துவர் ஆக மாறியிருக்கிறார். 

சூர்யா செய்திருக்கும் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ 
 அந்த நந்தகுமாரின் புகைப்படம்.

Amudhan maheshvarma .

நன்றி :

கருத்துகள் இல்லை: