தலைவா....
நெருப்புடா...
நெருங்குடா...
Dr. கோ. பிரேமா MD(Hom),
தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி, எந்த கொரோனா தடுப்பூசியையும் தன் நாட்டில் வாங்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
உலகநாட்டு தலைவர்கள் அனைவரும் மருந்து பெருமுதலாளிகளின் கைக்கூலிகளாக மாறியிருக்கும் இக்கொரோனா காலத்தில், இவர் ஏற்கனவே உசுநியின் கொரோனா தடுப்பு வழிமுறைகள், நாட்டின் பொருளாதாரத்தை சரிக்குமே தவிர கொரோனாவை அல்ல என கடுமையாக சாடியவர்.
கொரோனா சாதாரணமான கிருமிதான், இதற்கு ஊரடங்கு முகக்கவசம் என எதுவும் தேவையில்லை, எங்கள் இயற்கை நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இயற்கை மூலிகை மருந்துகள் போதும் என்று முடிவு எடுத்தவர்.
இவர் கொரோனா பரிசோதனையின் முகத்திரையை டார் டாராக கிழித்தெரிந்த காணொளி மிக பிரபலம்.
அதில் தான்சானியா அண்ணாச்சி:
"கார் ஆயில கொரோனா டெஸ்டுக்கு கொடுத்தனா ... அது நெகடிவ்.
பலாப்பழத்த கொரோனா டெஸ்டுக்கு கொடுத்தேனா அது உறுதியா தெரியலயாம்.
பாவ்பாவ்(பாக்க நம்மூரி பப்பாளி மாதிரி, சுவை வாழைப்பழம் மாதிரி) கொரோனா டெஸ்டுக்கு கொடுத்தேனா அது பாஸிட்டிவ்.
கிவாரே பறவை, ஆடு இதெல்லாம் கொரோனா பாஸிட்டிவ்."
இந்தக்காணொளியை மீண்டும் பார்க்க விரும்புவர்களுக்காக இந்த சுட்டி
https://m.facebook.com/story.php?story_fbid=10215910463385454&id=1562622139
தான்சானியாக்கு போலாமா?
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக