புத்தகம் —
3000ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
ஆசிரியர் — ஜான் வில்சன்
தமிழாக்கம் — டாக்டர் ப. காளிமுத்து
பண்டைய இந்தியாவின் நிலப்பரப்பு ;
வடக்கில் இந்துகுஷ் இமயமலைத் தொடர்களையும்,தெற்கே சிலோன் தற்போதைய இலங்கை மற்றும் அதனை சார்ந்த நிலப்பரப்பளவு முழுவதும் மேற்கில் சிந்து,குஜராத்,கொங்கன்,மலாபார்,கடற்கரை பகுதிகள்,கிழக்கில் சீனா,பர்மா,ஒரிசா,கொரமண்டல் கடற்கரைப்பகுதிகள் ஆகும்.
நதிகள் ; சிந்து,கங்கை,பிரம்மபுத்திரா மேலும் விந்தியாத்ரி,சாகியாத்ரிமலைத் தொடர்களில் உருவாகி ஓடிவரும் துணையாறுகள் மேற்கிலும் தெற்கிலும் பாய்தோடியது.
உணவு உற்பத்தியில் உச்சம் அடைந்திருந்தனர். தங்களது உற்பத்திப் பொருட்களை அயல்நாட்டுப் பொருட்களோடு பண்டமாற்றுச் செய்து கொண்டு வெளிநாடுகளுடன் வணிக உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள்.
நிலக்கரி போன்ற கனிமங்களின் பயன் அறிந்திருந்தனர்.அரசர்கள் முத்துக்களையும்,பொன்,வைரம், நவரத்தின மாலைகளையும் சூடியே காணப்பட்டனர்.
1855–ல் இந்திய அரசின் ஆண்டு வருமானம் 2,91,33,000 ஸ்டெர்லிங்காகவும்,பொதுக்கடன் 5,55,31,120 ஆகவும் இருந்துள்ளது.
புத்தவியல் ; எல்லாம் வல்ல அல்லது எல்லாம் அறிந்த படைப்பாளனைப் பற்றிஅல்லது நீடித்து நிலைத்திருக்கும் நிலை என்று குறிப்பிடப்படுகிறது.
வேதங்கள் ; வேதம் என்ற சொல் அறிவின் ஊற்று என்று பொருள் படுகிறது. ரிக், யஜுர்,சாம,அதர்வன வேதங்கள் பிற்கால இந்தியாவிலே காணப்படுகிறது.
வேதந்களுக்கு உரையெழுதிய பார்ப்பன உரையாசிரியர்களும்,இவர்கள் தொடர்ந்து எழுதிய இலக்கியப் படைப்புகளும் #ஆரியர் என்னும் சொல்லுக்கு 'மதிப்பிற்கு உரிய மனிதர்கள் ' எனறு பொருள் கூறுகின்றனர்.
ஆரியர்கள் ; ஒரே இடத்தில் வாழாமல் இவர்கள் நாடோடி வாழ்க்கை நிலையை கொண்டிருந்தனர். பனிகாலத்தை கணக்கில் கொண்டே இவர்கள் காலத்தை கணித்தனர்.குதிரைகளை பலிகொடுத்தும் வேள்வி யாகங்களை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
தொல்குடி மக்களாகிய திராவிடர்களை ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும் அரக்கர்கள்,உக்கிரர் என்றும் பெயரிட்டனர்.
பிரம்மா ; பிரம்மன் என்ற பெயருக்கு வழிபாடு என்ற பொருள் ஆகும். பிரம்மா வழிபாடு முறையை கைகொண்டவர்கள் பிராமணர்கள் என்று கூரிக்கொண்டனர். பிராமணன்,கடவுளின் விருப்பங்களை நமக்கு விளக்கியுரைப்பவர் என்றும் மிகபெரிய மனிதராக கருதப்படுபவர் என்றும்,கடவுளுக்கு படைக்கும் படைப்பொருள்களை பெற்று கொள்பவர்களாகவும் இருந்தனர்.
பிரம்மனின் வாயாக பிராமணனும், அரசர் மற்றும் போர்வீரர்கள் மார்பாகவும், குற்றச்செயல்களை தடுப்பவர்கள் பிரமனின் தோள்களாகவும், வைசியர் வேளாண் தொழில் செய்பவர் பிரமனின் தொடையாகவும்,சூத்திரன் பாதமாகவும் பிரமனின் உறுப்புக்களாக உருவகப்படுத்தப்பட்டனர்.
பண்டைய இந்தியாவில் நாம் ஜாதி என்ற ஒன்றை பாக்கமுடிவதில்லை .வேதகாலத்திற்க்கு பிற்பாடே இந்திய மக்களிடம் ஜாதி தினிக்கப்பட்டிருக்கின்றது என்பதை காணமுடிகிறது.
பண்டைய இந்தியாவில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதலோ , தீண்டாமை என்னும் கிருமியோ இருந்ததாக தெரியவில்லை. பெண்கள் சுயமரியாதை உடனும் சுதந்திரமாகவும் செயல்பட்டிருந்தனர்.
ஆரியர்களின் மதச் செயல்பாடுகளில் முதன்மையாகப் புனிதமான நெருப்பை வளர்த்தல்,கடவுளர்க்கு சோமபானம் கொடுத்தல்,நெய் அளித்தள்,விலங்குகளை வேள்வியில் பழியிடுதல்,வேத இசைப் பாடல்களை ஓதிப்பாடுதல் முதன்மையானவை அடங்கும்.
சொர்கத்தில் 11 கடவுள்கள்,பூமியில் 11 கடவுள்கள்,நடுவானில் 11 கடவுள்கள், ஆக முப்பத்தி மூவரும் நாங்கள் கொடுக்கும் இந்தஉயிர்பலிகளால் மகிழ்ச்சியடைவீர்களாக என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. பிற்காலத்தில் மனம்போன போக்கில் ஏழு சுழியங்களை இந்த 33 உடன் சேர்த்து 330,000,000 கடவுளர்களாக பெருக்கிக்கொண்டார்கள்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக