#சுஜாதா_நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#சுஜாதா_நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 நவ., 2026

சுஜாதா நினைவுகள்


எழுத்தாளர் #சுஜாதா.


மரணத்திற்குப் பின்.

செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? 
நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்குப் பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்..

 .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதைப் பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். 

தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்...