காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படு தோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராஜரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காமராஜரிடம் புலம்பி தீர்த்து விட்டார்.
உடனே காமராஜர் “இப்ப என்ன பிரச்னைங்கறேன்?”
அதற்கு நேரு “நம்ம கிட்ட போதுமான நவீன ஆயுதங்கள் இல்லாததினால் தான் இந்த தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நவீன ஆயுதங்கள் இருந்திருந்தால் நாம் ஜெயித்து இருக்கலாம்” என்றார்.
அதற்கு காமராஜர் “மத்த வேலையை நிறுத்திவிட்டு அந்த அமெரிக்ககாரன்கிட்ட நமக்குத் தேவையானதை வாங்குங்கறேன்”
வாங்கலாம் தான் ஆனால்….. என்று இழுத்தார் நேரு….
இன்னும் என்ன பிரச்னை?
இல்ல! அந்த வெப்பன்ஸ் இந்தியாவுக்கு அனுப்பனும்னா அமெரிக்காவில ஏதாவது ஒரு வங்கி நமக்கு பண உத்தரவாதம் எழுதி குடுக்கணும். ஆனா, இந்தியாவை நம்பி எந்த வங்கியும்உத்திரவாதம் தர மாட்டேன்ங்கிறான்…” என்று வருத்தத்துடன் சொன்னார் நேரு.
உடனே காமராஜர் அவருடைய பாஷையில்.
அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?
நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜர் மீண்டும் கேட்டார்.
அட அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?
நேரு புரிந்துகொண்டு உடனே..
இருக்கு…. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ன்னு ஒரு வங்கி இங்க இயங்கிட்டு இருக்கு..
உடனே காமராஜர்..அதை உடனே இழுத்து மூட சொல்லுங்கறேன்..
நேரு திகைத்தார்… அய்யோ அதை மூட சொன்னால் சர்வதேச பிரச்னை ஆகுமே?
உடனே காமராஜர்..அட என்னமோ ஆகட்டும். நமக்கு உதவாத அவன் கடை இங்க எதுக்குங்கறேன்?
உடனே நேரு எதையும் யோசிக்காமல் அந்த வங்கிக்கு உடனடியாக ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தார்.
எங்களுக்கு உதவி செய்யாத உங்கள் நாட்டு எந்த தொழிலும் இனி எங்கள் நாட்டில் வேண்டியதில்லை… உடனே இடத்தை காலி செய்யவும்” என்ற தகவல் வங்கி அதிகாரியை திகைக்க வைத்தது.
உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பினர். அடுத்த சில மணி துளிகளில் அமெரிக்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா ஆயுதம் வாங்குவதற்கு உத்தரவாதம் தர தயார் ஆயினர்.
எவனோ எழுதியதை வெறுமனே மனப்பாடம் செய்து பரிட்சை பேப்பரில் வாந்தியெடுத்தால் மட்டும் போதாது.. எப்படிப்பட்ட காரியத்தை எப்படி அணுக வேண்டும் என்ற நெஞ்சுரம்தேவை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக