30 டிச., 2015

நலக்குறிப்புகள்-94: அவரைக்காய் பற்றி சில பயனுள்ள தகவல்கள்


வைட்டமிங்கள் ஏ, சி, மற்றும் புரதம்,. நீர்ச்சத்து நிறைந்தது.
கர்ப்பகாலத்தில் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரித்தும் துணை புரியும்.

இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகைக்கு சிறந்த மருந்தாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் குணமாகும்.
கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சியை சீராக்கும்.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-1: குளோரின் நச்சுவாயுவால் ஏற்படும் பாதிப்புக்கள்




சென்னை வெள்ளம் குப்பைகூளங்களையும், சாக்கடைகளையும் வீட்டினுள்ளும், நடமாடும் தெருக்களிலும் கொண்டு குவித்துள்ளது. எனவே சகட்டுமேனிக்கும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. அதனால் குளோரின் என்ற நச்சுவாயு வெளியாவதால் சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், தோலில் ஒவ்வாமை, குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு போன்ற பல பாதிப்புகள்  நேர்கின்றன.  மேலும் இந்த வாயு நம் நாசியில் புகுந்து, நம் உடலிலுள்ள பயனுள்ள நுண்ணுயிர்களையும் அழிக்கிறது. இதற்கு மாற்றாக நல்ல நுண்ணுயிர்க்கரைசலைப் (Good Micro-organisms) பரிந்துரைக்கின்றனர். இதுபற்றி விரிவான கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் (டிசம்பர் 19, 2015), “ஆரோக்கியத்தைப் பாதிக்கும் குளோரினிலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தி இந்து தளத்திற்குச் சென்றால் இக்கட்டுரையை வாசிக்க முடியும்.

எனக்குப் பிடித்த இணையதளம்/வலைப்பூ-1: க்ரியா

க்ரியா இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில் காணலாம்.


க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில்  450,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம்

இன்றைய சிந்தனைக்கு-191: வேதாத்ரி மகரிஷி

உருவாகி  உடல்வளர்ந்து  வாழ்கின்றேன் என்
   உடலை வளர்த்து அறிவூட்டி  வாழ்தற்கென்னை
ஒரு  மனிதனாக்கி வைத்தும்,  இன்றும் கூட
   உணவு உடை, மற்றும் பல  வசதி எல்லாம்
தருகின்ற மனித இனம் தனக்கு என் சக்தி
   தக்கபடி  பயன்படுத்துகின்றேன்;ல்  என்ற
பெருநோக்குச் செய்கையே, நிஷ்காம்ய  கர்மப்
   பேரறமாம்.  மனிதனுடைய கடமை ஈதே.

-           வேதாத்ரி மகரிஷி

இன்று ஒரு தகவல்-49: ரேஷன் அட்டை விண்ணப்பம் தொடர்பாக

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து 80 நாட்களுக்குள் வழங்கவேண்டும்
.
விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க:

குறுஞ்செய்தி – 9445484748


தொலைபேசி – 7299008002

ஆன்மீக சிந்தனை-65: அன்னை சாரதாதேவி

இறைவனிடத்தில் செலுத்தும் அன்பின் ஆழத்தைப் பொறுத்தே 

இறைவனை அடைய முடியும் – அன்னை சாரதாதேவி

26 நவ., 2015

ஆன்மீக சிந்தனை-64: சத்குரு ஜக்கி வாசுதேவ்

எண்ணங்கள் குவியலாகக் கிடக்கும்போது குழப்பம்தான் மிஞ்சுகிறது.  மனசுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது – சத்குரு ஜக்கி வாசுதேவ்

18 ஆக., 2015

தாயுமானவரின் பராபரக்கண்ணி-64:

பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா

வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே. 

ஆன்மீக சிந்தனை-63:

நீயே உனக்கு நண்பனாகவும், பகைவனாகவும் இருக்கிறாய் - பகவத்கீதை 

இன்றைய சிந்தனைக்கு-190: வள்ளலாரின் அமுதமொழிகள்

வள்ளலாரின் அமுதமொழிகள்

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே!
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே!
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே!
பசித்தோர் முகத்தைப் பார்த்திராதே!
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே!
குருவை வணங்கக் கூசி நிற்காதே!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே!