என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 ஜூன், 2010
தாயுமானவரின் பராபரக்கண்ணி-14:
வானந்தம் மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்கு
ஆனந்தம் தந்த அரசே பராபரமே. யோக சித்தி-28: இயற்கை-4
ஓசைப் படமால் ஒருகோடி அற்புதஞ்செய்
தேசுற்றால் சித்தாடுந் தாய்.
சித்து விளையாடும் இயற்கை அன்னை தேசு, அழகு, எழில், ஒளி, திறமை, பெருமை பொருந்தியவள். அவளுடைய மாயவித்தைகளின் அற்புதங்களைச் சொல்லிமுடியா! அவள் கோடிக்கணக்கான அற்புதங்களைச் செய்கிறாள். ஏதாவது சிறு காரியம் நிறைவேற்றினாலும் தற்பெருமை பேசுகிறான் மனிதன். இயற்கை அன்னை கோடிக்கணக்கான அற்புதங்களை ஓசைப்படாமல், தம்பட்டமில்லாமல், ஆரவாரமில்லாமற் செய்கிறாள்.
29 ஜூன், 2010
இன்றைய சிந்தனைக்கு-110:
எக்காலத்திலும் பகைமை என்பது பகையினால் நீங்கிவிடுவதில்லை. அன்பு ஒன்றினாலேயே நீங்கும் - புத்தர்
தாயுமானவரின் பராபரக்கண்ணி-13:
பார்த்தஇடம் எல்லாம் பரவெளியாய்த் தோன்றஒரு
வார்த்தை சொல்லவந்த மனுவே பராபரமே.
யோக சித்தி-27: இயற்கை-3
கதிராற் கடன்முகந்து, கார்மேக நல்கி,
இதஞ்செய் இயற்கை என்றாய்!
28 ஜூன், 2010
இன்றைய சிந்தனைக்கு-109:
துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.
வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை.
- மகாத்மா காந்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



