14 டிச., 2023

இன்றைய புத்தகம்

"பின்னகர்ந்த காலம்"

வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்கள்

பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து தொடங்கி, அச்சகம், இதழியல், சினிமா ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவங்களையும் எழுத்து, இசை, நாடகம், ஓவியம் சார்ந்த அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

திருநெல்வேலி, சென்னை மதுரை முதலான நகரங்களில் வாழ்ந்த அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். 

இந்த நூல் வண்ணநிலவனின் சுயசரிதையாகவும் அவர் வாழ்ந்த காலத்தின் ஆவணமாகவும் இலக்கிய வரவாறாகவும் அமைந்துள்ளது.

வண்ணநிலவனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றியையும் வேதனையையும் ஏமாற்றத்தையும் அவமானங்களையும் உணரச் செய்யும் பகிர்வு இது.

நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/pinnakarnthakaalam_1268/
அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0CPLKRCW3?

உங்கள் கவனத்திற்கு

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

11 டிச., 2023

வஉசி நினைவுகள்

*நினைவுகள் அழிவதில்லை*
🙏💐🙏💐🙏💐
*_வ.உ.சிதம்பரனாரின் உயில் இது._*
 
 _தன் சொத்து, வருமானம் ஆஸ்தி எல்லாம், வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டி இழந்த, அந்த இந்தியனின் உயில் இது._

_இப்படிபட்ட தமிழனும் உன்னதமான இந்தியனாக வாழ்ந்தான் என இன்றும் கண்ணீர் சிந்தவைக்கும் உயில் இது._

_அந்த கப்பலோட்டிய இந்தியனின் நினைவு நாளில், அந்த உயிலை படித்து, அந்த தியாகிக்கு சில சொட்டு கண்ணீர் சிந்துவதுதான் உண்மையான அஞ்சலி._

*_இதோ அந்த உயில்._*

_"மூத்தமகன் *ஆறுமுகத்திற்கு* பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும்._

_ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும்._

_எனது பாகத்திற்கு *ஒட்டப்பிடாரத்தில்* பெரிய புஞ்சையில் 2 சங்கிலி நிலமும் 16 மரக்கால் நஞ்சையும் கிணற்று தோட்டமும் இருக்கிறது, இது தவிர *ஒட்டப்பிடாரத்தில்* கீழ்க்காட்டில் 1.75 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று, .75 சங்கிலி புஞ்சை ஒன்றும் இருக்கின்றன._

_என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ள புஞ்சைகளையும் பயிர் செய்ய முடியாது. அவற்றை தங்கள் (பிரதிநிதி) பெயருக்கு ₹500 கிரயம் செய்து கொடுக்க நினைத்து கொண்டு இருக்கிறேன்._

_*ஒட்டப்பிடாரத்தில்* ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. மச்சை பிரித்தெடுத்து, சுவர்களை இன்னும் 3 அடி உயர்த்தி, தேக்கு தேக்கு மரக்கட்டை போட்டு, மேல் பக்கமுள்ள இரண்டு சன்னகளுக்கு நேராக கீழ் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்து, அரைவிட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும்._

_இப்போழுதும் ₹200 விலை போகக் கூடிய *சட்ட புஸ்தகங்கள்* என்னிடமிருக்கின்றன அவற்றை விற்க வேண்டும்._

_இப்போது செய்ய வேண்டிய அவரச காரியம், என் மகளிருவரில் மூத்தவளாகிய *சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்கு* கலியாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு  ₹500 க்கு அவளிடம் நகைகள் இருக்கின்றன._

_இன்னும் ₹500 க்கு நகைபோட வேண்டும். கலியாணப் பந்தல் செலவு, ஒரு வருஷத்து சீராட்டு செலவு, என ஒரு கம்பெனி பணம் ₹1000 சரியாய் போகும். *மரகதவல்லி அம்மாளுக்கு* இன்னும் இரண்டு வருடம் கழித்து, கலியாணம் செய்து வைக்க வேண்டும். அவளுக்கும் அவளிடம் இருக்கின்ற நகைகளை சேர்த்து ₹1000 க்கு நகைகளை போட வேண்டும். அதற்கு மற்றொரு கம்பெனி பணம் சரியாய் போகும்._

_என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகளை தாங்கள் வாங்கி வைத்து இருந்து கோவாப்பிரேட்டிங் சொஸைட்டியில் கொடுக்கிற கரண்ட் டிபாஸிட் வட்டி போட்டு கொடுக்க வேண்டும்._

_இந்த நிலைமையில் என் மனைவி மக்களுக்கு அன்னவஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை (வருமானமில்லை)._

_அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயல்கிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன._

_தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு 5 மாத வீட்டு வாடகை பாக்கி ₹135._

_தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ₹30._

_வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ₹30._

_சில்லறை கடன் ₹60._

_இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ₹20._

_சோமநாத்துக்கு ₹16._

_வேதவல்லி ₹50_

_எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்"._

_உண்மையான *சத்திய சோதனையும், நெஞ்சுக்கு நீதியும்* இதுதான், இந்த உயில்தான்._

_*"சிறையில் நான் இழுத்தது செக்கு அல்ல, அது பாரதமாதாவின் தேர்"* என சொன்ன அந்த அப்பழுக்கில்லா தேசபக்தனின் தியாகத்தின் சின்னமாக நிற்கின்றது,இந்த உயில்._

*தன் இறுதி நாட்களில்*..*சென்னையில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி மறைந்தார் என்ற செய்திதான்..*
*இன்னுமொரு சமூக சோகம்..*

_இவரை போன்ற உன்னத ஆத்மாக்களின் நல்ஆசியில்தான் இத்தேசம் இப்பொழுது சிலிர்த்து கொண்டு எழுகின்றது.

*அந்த தியாகச்சுடர் அணைந்த நாள்.. நவம்பர் 18,  நினைவுநாள் ..*
🙏💐🙏💐🙏👍

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய புத்தகம்

“நிலவைச் சுட்டும் விரல்”

யுவன் சந்திரசேகர்

கவிதைகள் குறித்த கட்டுரைகள்

“இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது.”
- யுவன் சந்திரசேகர்

நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/nilvaichuttumviral_1267/
அச்சுநூலின் இணைய இணைப்பு:
https://www.amazon.in/dp/B0CPLJDX5Y?
மின்நூலின் இணைய இணைப்பு:https://www.amazon.in/Nilavi-Chuttum-Essays-ebook/dp/B0CPJS8BMG/

மகாகவி பிறந்த தினம்