14 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-23:

நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்ற சோர்வை விட்டுத்தள்ளுங்கள். நடந்து முடிந்ததை எண்ணி, மனதில் சுமையாக வைத்துக்கொள்ளாதீர்கள். இருப்பது எதுவானாலும் அதை உற்சாகமாக எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் செயலையும் முயற்சி எடுத்து நல்லமுறையில் செய்ய முற்படுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிறருக்கு உதவியாக இருந்து, மன நிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே சொர்க்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயலாமையை எண்ணி மனம் புழுங்கி தன்னை வருத்திக் கொள்வதே நரகம். நல்லவர்களின் சேர்க்கை, நல்ல எண்ணங்கள் ஆகியவற்றில் ஆர்வத்தோடு ஈடுபடுவது உள்ளத்திற்கு டானிக் போல உதவும். - ஸ்ரீ சத்ய சாய்பாபா.
நன்றி: தினமலர் - ஆன்மிகம் அறிவோமா

கருத்துகள் இல்லை: