இந்தக் கொடி
சொந்தக் காலில்
நிற்க முடிவதில்லை...
இந்தக் கொடி
இங்கே
மரமாவதேயில்லை...
இளமையிலிருந்து
முதுமையின்
மூச்சு நிற்கும் வரை
எந்த மரத்திலாவதுதான்
சுற்றிப் படர்கிறது...
தன்
மென்கரத்தை
எந்த மரத்தின்
வலிமையான
கரத்தில் இணைத்ததோ
அந்தக் கரம்
நெகிழும் பொது
இந்த மென்கொடி
சுடுமணலில் வீழ்ந்து
துடிக்கிறது...
இந்தக் கொடி
என்றுதான்
மரமாகுமோ?
நன்றி:
"கனவின் விலை ஒரு ரூபாய்"
மேலூர் மாவேந்தன்
அகரம் , சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக