மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோலவிளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையை அருளேலோர் எம்பாவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக