20 நவ., 2017

பாரதிதாசன் கவிதைகள்:-16: : மெய் சொல்லல் நல்லதப்பா!

மெய்

மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ

     மெய் சொல்லல் நல்லதப்பா!


கருத்துகள் இல்லை: