கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்
பதிவு: ஜூன் 08, 2018
2016-2017-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது. முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.
ஆனால் 2017-2018-ம் ஆண்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது.
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49,329 எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால், வேலைவாய்ப்பை 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் இழந்துள்ளனர்.
ஆதாரம்: மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக