5 டிச., 2018

நூல்மயம்-18:

இப்படி ஒரு வீட்டருகே இருந்தால்! அதுதான் சொர்க்கம்.

காரைக்குடியில் டவுன்பஸ்ஸில் பேருந்து நிலையம். அங்கிருந்து மதுரை. மதூரைக் காமராசர் பல்கலைக்கு டவுன்பஸ். பிரம்மாண்டமான பல்கலை நூலகம். நிதானமாகப் பிடித்து 6 குண்டுகுண்டான புத்தகங்கள் (என்னுடைய அட்டை 3 + நண்பருடைய அட்டை 3). அதற்காகக் கொண்டுசென்ற பெட்டியில் வைத்து வீட்டிற்கு கொண்டுசெல்கையில் ஏற்படும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தபின் வெறி பிடித்தாற் போல் அல்லும் பகலும் படித்து முடித்து, மறுபடியும் மதுரை என்று ஓடிய அந்தக் காலமெலாம் கனவாய்த் தெரிகிறது!

கருத்துகள் இல்லை: