16 ஜன., 2019

குட்டிக்கதை-73: விருப்பு, வெறுப்பு

விருப்பு… வெறுப்பு...

எப்படிப்பட்ட பெண்ணை வீட்டிற்குக் கூட்டி வந்தாலும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால்
நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான் - டாம்

“ உன்னுடைய அம்மாவைப்“ போலவே ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடி. பிறகு பார் அவளை உன் அம்மாவிற்கு கண்டிப்பாய்ப் பிடித்துப் போகும்” - இது நண்பனின் ஆலோசனை

தேடித் தேடிப் பார்த்து கடைசியில் அந்தப் பெண்ணை டாம் கண்டு பிடித்தான்

“நீ சொன்னதைப் போலவே ஒருத்தியைக் கண்டுபிடித்தேன்
அவள் பேசுவது
ஆடை அணிவது
அவளுடைய தோற்றம் கூட
என் அம்மாவைப் போலத்தான்

நீ சொன்னது மாதிரியே என் அம்மாவிற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று…” என்றான்

“அப்படியா… பிறகென்ன நடந்தது…” நண்பன் கேட்டான்

“ஒன்றுமில்லை…
என் அப்பா அவளை வெறுக்கிறார்… ” 🌹

🌷 ஓஷோவின்  "கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” 🌷

நன்றி: Ps அரவிந்தன், முகனூல்

கருத்துகள் இல்லை: