*ஆன்லைன் கல்வி*
மேலிருந்து கீழாக,
கீழிருந்து மேலாக,
இடமிருந்து வலமாக,
வலமிருந்து இடமாக,
எத்தனை அருமையாக
ரோஜா மலரை
படம் சொன்னோம்;
அதன் வாசனை எப்படி
உணர்த்தக் கூடும்?
புத்தம் புது ரோஜா ஒன்றை
வகுப்பறையில் காட்டிட
"ஐ" என்று அவர்தம்
கண்கள் அகல விரிந்ததை
இப்போது நான் எப்படி
அறிந்து கொள்ள!
கவிதையின் ஈரம் இன்னும் காயவில்லை.
அலுவலகத்திற்கு காரில் வரும்போது தட்டச்சு செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக