31 ஆக., 2020

நூல்மயம் : கார்ல் மார்க்ஸ்

"கார்ல் மார்க்ஸ்"
-வாழ்க்கை வரலாறு-

"சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி 
மார்க்சிய-லெனினிய ஆய்வு நிறுவனத்தால் எழுதப்பட்டுள்ளது 

1220 பக்கங்கள் 
அபூர்வ புகைப்படங்கள் 
அறிய ஓவியங்களின் காட்சிகள் அடங்கிய முழுமையான மிகச்சிறந்த புத்தகம் 

"மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பல வகைகளில் நமக்கு முக்கியமாக உள்ளது.அது ஒரு மிகப்பெரிய புரட்சிக்காரரின் வாழ்க்கை.அது ஒரு மிகப்பெரிய சிந்தனையாளரின் வாழ்க்கை.மார்க்சியம் என்ற அற்புதமான ஒரு சிந்தனை அவரது வாழ்க்கை முழுவதிலும் ஒரு தொடர் நிகழ்வாக உருவாகிக்கொண்டிருந்தது 

அது ஒருபோதும் முடிந்த சூத்திரமாக ஆகிவிடவில்லை.சமூக அரசியல் அசைவுகளில் தேக்கங்கள் ஏற்பட்ட போதெல்லாம் மார்க்ஸ் மேலும் மேலும் சமூகவரலாற்றின் ஆழங்களையும் பரப்புக்களையும் அகழ்ந்தெடுத்துக் கொண்டே இருந்தார் 

மார்க்சின் அரசியல் வாழ்க்கை சந்தித்த பலவகை ஏற்ற இறக்கங்களையும் ஒவ்வொரு அரசியல் சந்தர்ப்பத்தில் மார்க்சின் எதிர்பார்ப்புக்களையும் அவற்றின் வெற்றி அல்லது தோல்விகளையும் விரிவாகச் சித்தர்ப்பனவாக இந்நூலின் இயல்புகள் அமைந்துள்ளன"

நூலிற்காக-பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள்

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு 
விலை ரூபாய் 850 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரை கிளை 
7708683563
WhatsApp

கருத்துகள் இல்லை: