1 செப்., 2020

கொரானா தடுப்பூசி என்னும் ஆபத்து ! (முக்கிய ஊடகங்களில் வெளிவராதது)

Dr. Mathi Vanan

கொரானா தடுப்பூசி என்னும் ஆபத்து.
(முக்கிய ஊடகங்களில் வெளிவராதது)

அடினோவைரஸ் என்னும் கிருமியில் கொரானா வைரஸ் ஆர்.என்.ஏ மரபணுவை சேர்த்து செயற்கை கிருமியாக உடலில் செலுத்துவது கொரானா தடுப்பூசி முறை.

இது முதன்முதலாக மனிதன் மீது செய்து பார்க்கப்படுகிறது. இதன் விளைவு இதுவரை அறியாதது.

2002 சார்ஸ் வைரஸ் தடுப்பூசி விலங்கு பரிசோதனைகளுக்கு இரு வருடங்கள் ஆனது. ஆயினும் தோல்வியில் முடிந்தது. இப்போதோ ஐந்தே மாதங்களில் விலங்கு பரிசோதனைகள் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் என சொன்னாலும், எதிர் பொருள் செறிவூட்டுப்பட்டு சொந்த உடலையே பாதிக்கும் பண்புடையவை. இது சோதனை சாலையில் அறிய இயலாது. தடுப்பூசி போட்டவர்கள் கொரானா தாக்குதலுக்கு உள்ளாகும்போது தான் தெரியும்.

அடினோ வைரஸ், கொரானா வைரஸ் ஆர்.என்.ஏ என்பவை அடிப்படையில் உடலுக்கு எதிராக எதிர் பொருளை உற்பத்தி செய்பவை.

இவ்வகை செயற்கை கிருமிகள் ரத்த நாளங்களில் நுழைபவை. ரத்த போக்கை தடுத்து உறுப்புகளை பாதிக்கும் தன்மை உடையவை 

மேலும் இதில் சேர்க்கப்படும் நியுக்ளிக் அமிலங்கள், விலங்கு செல், மனித செல் மரபணுக்கள் சொந்த உடலுக்கு எதிரான எதிர் பொருளை உற்பத்தி செய்பவை.

இதோடு இந்த நியுக்ளிக் அமிலங்கள் உடலின் எந்த செல்லுக்குள்ளும் நுழைபவை. மனித உடலின் மரபணுவில் செருகி மாற்றத்தை உண்டு பண்ணுபவை. இம்மாற்றம் புதிய வகை புற்றுநோயை தூண்டும்.

கூடுதலாக இனப்பெருக்க செல்களில் நுழைந்தால் அடுத்த தலைமுறைக்கும் மரபணு மாற்றமும் தீங்குகளும் பரவும்.

அடினோவைரஸ் செல்லை நிலைப்படுத்த கொழுப்பு சிறு துகள்கள், உடலால் செரிக்க முடியாத பாலி எதலீன் கிளைக்கான்கள் சேர்க்கப்படுகிறது. இவையும் சொந்த உடலுக்கு எதிராக எதிர் பொருளையும், புற்று நோய் தூண்டலையும் ஏற்படுத்துபவை.

இவ்வகை அடினோவைரஸ், கொரானா வைரசை சேர்த்து உடலில் செலுத்தும்போது உடலுக்குள் அவை புதிய வைரஸ்களாக பரிணாமம் பெறும் வாய்ப்பும் உண்டு. உடலுக்குள் ஏற்கனவே உறங்கி கிடக்கும் வைரஸ்களுடன் கலந்து புது கிருமிகள் உருவாகும் வாய்ப்பும் உண்டு.

இப்புது கிருமிகள் எப்படி செயல்படும், என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அறியாதவை. ஒரு மனிதரிலிருந்து அடுத்த மனிதருக்கு தாவும் தன்மையும் உடையவை.

இந்த ஆபத்து உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா நாடுகள் கூட்டத்தில் முன்பு பேசப்பட்டு தீவிர கண்காணிப்பு தேவை என ஏற்கப்பட்டவை. ஆனால் இம்முறை கொரானா தடுப்பூசியில் இவை எவையும் கண்டு கொள்ளப்படவில்லை.

தடுப்பூசி கம்பெனிகளே தடுப்பூசி விளைவு ஆய்வும் செய்வதால் தனி அமைப்புகளின் கண்காணிப்பும் இல்லை. மருந்து கம்பெனிகள், நிறுவனங்கள், அரசுகள் எல்லாம் ஒரே கூட்டில் இருக்கின்றன.

சொந்த உடலுக்கு எதிராக எதிர் பொருளை உற்பத்தி செய்வது,  புற்றுநோயை தூண்டுவது, அடுத்த தலைமுறைக்கு மரபணு மாற்றத்தை கடத்துவது, அவர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பது, புது வகை மரபணு மாற்ற கிருமிகளை உருவாக்குவது என்னும் ஆபத்துகளை உடைய, உலகின் சோதித்தறிய படாத முதல் ஆர்.என்.ஏ மரபணு தடுப்பூசியை உடலில் செலுத்துவது, அதுவும் பல ஆண்டுகள் ஆய்வுகள், கண்காணிப்பு இல்லாமல், வெகு மக்களுக்கு துரித கதியில் போடுவது உலகின் மிக பெரிய ஆபத்தாக முடியும்.

Dr. Romeo F Quijano MD Pharmacology
மருந்தியல் நச்சு இயல் துறை
பிலிப்பைன்ஸ்

https://www.bulatlat.com/2020/08/21/hazards-of-the-covid-19-vaccine/?fbclid=IwAR2eh3fr0RnBu-1eHZKSkaCr8mAhm8vdeoDyE7We8KL1_ycFc8ak26T_IqU

Grateful thanks to :


கருத்துகள் இல்லை: