கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய நடிகர் சோனுசூட்டுக்கு ஐ.நா. மனிதநேய விருது..!!
பாலிவுட் நடிகர் சோனுசூட்
தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்.
இவர் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு பெரிய அளவில் உதவிகள் வழங்கி இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
தற்போது அவரது சேவைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சோனுசூட்டை கவுரவப்படுத்தும் வகையில் ஐ.நா. சார்பில் சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த விருதை ஹாலிவுட் பிரபலங்கள் லியனார்டோ டிகாப்ரியோ, ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.
கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு பெரிய அளவில் உதவிகள் வழங்கி இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
சமீபத்தில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடுகளை வாங்க காசு இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத வீடியோ வைரலானது.
இந்நிலையில் அவருக்கு டிராக்டர் வழங்கி உதவி புரிந்தது பலராலும் பாராட்டப்பட்டது.
ஐ.நா விருது குறித்து சோனு சூட் கூறும்போது, “எனது நாட்டு மக்களுக்காக இயன்ற உதவிகள் செய்தேன்.
இதற்காக ஐ.நா. விருது கிடைத்து இருப்பது பெரிய அங்கீகாரம், ஐ.நா முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவையும் கொடுப்பேன்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக