ஜுலை 2021ல் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி :
Dr. கோ. பிரேமா MD(Hom),
25 கோடி நபர்களுக்கான கொரோனா தடுப்பூசி 2021ஜுலையில் இந்தியா வரவிருக்கிறது.
130கோடி இந்தியர்களில் யார் இந்த 25கோடி?
ஆயுஷ் மற்றும் அலோபதி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், என்ற front line workersல் அடங்கும் ஒரு பெருங்கூட்டம் மற்றும் 50+ வயதினர்.
இதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக அரசு பதிவு செய்த அனைத்து மருத்துவ ஊழியர்களின் தகவல்கள் சேகரிக்கும் வேலை தொடங்கிவிட்டது.
இதில் ஆதார் எண் சேர்க்கப்பட இருக்கிறது.
இதில் குறிப்பிட்டு நாம் கவனிக்க வேண்டியது.
1. எந்த அரசு அல்லது தனியார் மையமும் ஒருவரது ஆதார் எண் சேர்ப்பது என்பது அவரது தனியுரிமையை மீறுவது என்று என்றோ உச்சநீதிமன்றம் சொல்லியாயிற்று. பின் மீண்டும், ஆதார் எண் கேட்பதோ அதில் தடுப்பூசி போடுவதைப்பற்றிய தகவலை சேர்ப்போம் என்பதோ சட்டப்படி குற்றம் தானே?
2. அலோபதி ஆயுஷ் இரண்டிலும் தடுப்பூசி விரும்புவோர் மறுப்போர் உண்டு.
எனில் ஒருவரது விருப்பத்தேர்வுக்கு இங்கு மதிப்பு வேண்டும்.
என்னை கேட்டால் நான் தடுப்பூசி மறுப்பேன்.
நீங்கள் மறுக்க தேர்வுசெய்தால் தைரியமாக மறுத்துவிடவும்.
3. கொரோனா தடுப்பூசி ஆதரவு நிலையில் இருக்கும் மருத்துவர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டு மரணமோ, தற்போது பரிசோதனையில் தெரியவந்துள்ள தீவிர நரம்பியல் பிரச்சினையோ, தீவிர கொரோனாவோ வந்தால் எம்மாதிரயான இழப்பீடு தர அரசு திட்டம் வகுத்துள்ளது?
ஏற்கனவே, மற்ற தடுப்பூசிகளை போலவே கொரோனா தடுப்பூசிக்கும் அதன் நிறுவனம் எந்த பொறுப்பும் ஏற்காது என்று அத்தனை நிறுவனங்களுக்கும் விலக்கு கொடுத்தாயிற்று.
எனில் கொரோனா தடுப்பூசி பாதகங்களுக்கு அரசு முழு பொறுப்பு எடுக்கவேண்டும். இதற்கான திட்டத்தை முதலில் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
செய்வார்களா?
மருத்துவர்களில் குறைந்தபட்சம் 5% பேருக்கு சாதகபாதகங்கள் பற்றிய புரிதல் இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் மற்ற ஊழியர்கள்?
முற்றிலும் மருத்துவர்களின் அழுத்தத்தில் பணி செய்யும் இவர்களுக்கான பாதுகாப்பு என்ன?
வருடந்தோறும் அக்டோபரில் ஊழியர்களை ஃப்ளூ தடுப்பூசி போட கட்டாயப்படுத்தும் சில அமெரிக்க மருத்துவமனைகள் உண்டு.
அப்படி பாதகங்களை கண்கூடாக சந்திக்கும் இவர்கள் மெல்ல தடுப்பூசி மறுப்பாளர்களாக உந்தப்படுகிறார்கள்.
இவர்கள் வருடந்தோறும் இந்த தடுப்பூசி திணிப்பை எதிர்த்து வருகின்றனர்.
அப்படித்தான் 2017ல் ஒரு அமெரிக்க மருத்துவமனையில் ஃப்ளூ தடுப்பூசி போடாத மருத்துவ ஊழியர்களை தனித்து அடையாளப்படுத்த முகக்கவசம் அணிய நிர்ப்பந்தித்தது நிறுவனம்.
அதில் செவிலியர் ஒருவர், கவசம் தானே? ஒன்றென்ன இரண்டு அணிகிறேன் என தனது இரு மார்பகஙக்ளுக்கும் அணிந்து செய்த நூதன தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம் தான் நீங்கள் படத்தில் காண்பது. இதுபற்றிய பழைய லின்க்
2017ல் எழுதியது. https://www.facebook.com/photo.php?fbid=10209818692574991&set=a.3593581369174&type=3
நமது ஊரில் ஆட்டுமந்தைகள் போல் இல்லாமல் விழிப்புடன் துணிவுடன் பணி அழுத்தம், மேலதிகாரிகள் அழுத்தம், பொருளாதார நிர்ப்பந்தம், இவற்றை கடந்து கொரோனா தடுப்பூசி மறுப்பை வாய்திறப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
முறையான பரிசோதனைகள் செய்யப்படாத, பாதுகாப்பற்ற, தேவையில்லாத கொரோனா தடுப்பூசி போட அறிவுள்ள எவரும் சற்று சிந்திப்பர்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக