Grateful thanks to
Erika Lidberg\pinterest
🌧️ மாரி...! ⛈️
*தமிழ் மழை...!*
*ஏன் அடைமழை என்கிறோம்?*
*அடைமழை = வினைத்தொகை!*
*அடைத்த மழை*
*அடைக்கின்ற மழை*
*அடைக்கும் மழை*
*விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!*
*கனமழை வேறு! அடைமழை வேறு!*
*தமிழில், 14 வகையான மழை உண்டு!*
*தமிழில், மழை!*
*1. மழை*
*2. மாரி*
*3. தூறல்*
*4. சாரல்*
*5. ஆலி*
*6. சோனை*
*7. பெயல்*
*8. புயல்*
*9. அடை (மழை)*
*10. கன (மழை)*
*11. ஆலங்கட்டி*
*12. ஆழிமழை*
*13. துளிமழை*
*14. வருள்மழை*
*வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை!*
*ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!*
*மழ = தமிழில் உரிச்சொல்!*
*மழ களிறு= இளமையான களிறு*
*மழவர் = இளைஞர்கள்*
*அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..*
*மழை எனும் சொல்! மழ + ஐ*
*இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை காரணப் பெயர்!*
*மழை வேறு/ மாரி வேறு!*
*அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!*
*மழை/மாரி ஒன்றா?*
*மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது,காற்றாடி போல!*
*மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!*
*மார்+இ= மாரி!தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!*
*அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!*
*தமிழ்மொழி,பிறமொழி போல் அல்ல! வாழ்வியல் மிக்கது!*
*அட்டகாசம்...!*
*இன்னும் கொஞ்சம்...*
*1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது*
*2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்.*
*3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...*
*சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு..*
*(சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)*
*சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….*
*அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.*
*சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்*
*சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்*
*4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை*.
*அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..*
*5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்*
*6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்)*
*7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..*
*8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..*
*மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.*
*(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக