இந்த குழுவில் அதிக நண்பர்கள் உள்ளோம் .
மகிழ்ச்சி.
*ஒரு சிறு வேண்டுகோள்.*
*ஏற்பதும், மறுப்பதும் உங்கள் உரிமை*
👇👇👇👇👇👇👇
2021 முதல் நாமும், நம் குடும்பத்தாரும், பாலிதீன் பைகளில் பொருள் வாங்குவதை நிறுத்தலாமே? பயன்படுத்துவதை நிறுத்தலாமே?*
*சிலரேனும் செவிமடுத்து மாற வாய்ப்புண்டு அல்லவா?*
உதவுங்கள் உறவுகளே!!
நாம் விட்டுச்செல்லும் உலகம் நஞ்சாகிவிடாமல் , வரும் சந்ததியும் வாழவேண்டுமல்லவா?
நமது இளமைக்காலம்,
எவ்வளவு இனிமையானது...
இயல்பானது.....
நமது முன்னோர்களை வாழ்த்தி வணங்குவோம்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
பாலிதீன் பைகளை ஒவ்வொரு தனி நபரும் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என சிந்தித்து, சிறு முயற்சியை துவங்குவோம்.
👉 *காய்கறி, மளிகை பொருள்கள், பழங்கள் வாங்க செல்லும் போது துணி பைகளை கொண்டு செல்லுங்கள்*
👉 *மீன் , இறைச்சி, டீ, காபி, பழச்சாறு, வாங்க செல்லும் போது ஒரு பாத்திரத்தை கொண்டு செல்லுங்கள்*
👉 *நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு பொருளை வாங்க நேரிடலாம் அப்போ வேறு வழி இல்லாமல் பாலிதீன் பைகளில் பொருளை வாங்க நேரிடும் அதை தவிர்க்க எப்பொழுதுமே உங்கள் வாகனத்தின் முன்பு ஒரு துணிபையை வைத்து கொள்ளுங்கள்*
*நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி நபரும் முயற்சி செய்யுங்கள் உங்களில் இருந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்,*
*ஒரு நாளைக்கு ஒரு நபரிடமாவது இந்த நாட்டின் பசுமையை காத்திட விழிப்புணர்வு கொடுங்கள்*
வருங்கால சந்ததிகளை நல்வாழ்வு வாழ வழி செய்வோம்.
நன்றிகளும்,
வணக்கமும் ....
🤝🤝🙏🙏🙏🙏🙏👑 முதலில் நாம்மாறுவோம்...., துணிப்பையை எடுப்போம். இந்த பதிவை படித்து உறுதிஎடுத்து மற்றவருக்கும் எடுத்து கூறுவோம்.
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக