யு.ஆர். அனந்தமூர்த்தியின் ’பிறப்பு’ நாவல்
வாசகர் பார்வை
”ஆதி அந்தமற்ற தேடல்”
…’பிறப்பு’ நாவல், பழங்கால கேரள நாயர்/நம்பூதிரி தரவாடுகளில் நாம் உணரும், தொன்மையின் ஒருவித பூடக/மந்திரத் தன்மையைக் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்புகளை நாவலின் சில பாத்திரங்கள் வைத்துக்கொண்டிருக்கின்றன. காமத்தின் அலைதலும், நதிமூலத்தின் கேள்வித் தத்தளிப்புகளும், சென்றமர்வதற்கான நிம்மதியான இலக்கின் தேடலும் கொண்டு கதையின் முக்கிய மாந்தர்கள் வாழ்வில் பயணித்துக்கொண்டேயிருக்கிறார்கள். அழுத்தத்தின் மூச்சு முட்டலிலிருந்து, சுவாசம் பெற, தப்பிக்கும் ஜன்னலாகவே, ஆன்மீகத்தை அவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளத் தேர்ந்தெடுக்கிறார்கள்…
…மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் சரியான, பொருத்தமான தலைப்பை நாவலுக்கு இட்டிருக்கிறார் (கன்னடத்தில் ’Bhava’). அவரின் மொழிபெயர்ப்பு, அனந்தமூர்த்தியின் எழுத்தில் ’Bhava’வில் ஊடாடிய மாயத்தன்மையை அப்படியே நெருக்கமாகக் கொண்டுவந்திருந்தது. நிதானமாக, ஒரு ரயில் பயணத்தில் துவங்குகிறது நாவல். செல்லச் செல்ல, சாஸ்திரியின், தந்திரியின், தினகரின் இறந்த கால நினைவோடைகளாக விரியும்போது படு வேகமெடுக்கிறது…”
நன்றி: வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/story.php?story_fbid=27124855970431742&id=100000021174731&mibextid=wwXIfr&rdid=FzEyLUAnvL1oCzG1#
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/pirappu_209/
அமேசானில் வாங்க: https://www.amazon.in/dp/B07DMMVCPV
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0969V6SW8
@followers Kannan Sundaram TopFans
#பிறப்பு #pirappu #ananthamurthy #URAnanthamurthy #tamilbookstore #bookreview #vaasagar #ReadingTamil #tamilliterature #IndianLiterature #booklovers #tamilreaders #LiteraryJourney #spiritualsearch #novelreview #translationworkshop #kalachuvadu #mustread #bookstagramtamil #readersofinstagram#tamilbookstagram #deepreading #classicliterature #philosophicalreads #KeralaBackDrop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக