1 மே, 2026

இலக்கிய வட்டம்

காலச்சுவடு 317 ( மே 2026)

1. தலையங்கம்: தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் காவல் மரணங்கள், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாகச் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான தலையங்கம்.

2. துணைத் தலையங்கம்: ஓர் இதழாசிரியராகப் பல்வேறு கருத்துக்களை விரிவாகப் பேசும் பொதுவெளியை உருவாக்கிய அரவிந்தனின் மறைவையொட்டி எழுதப்பட்ட துணைத் தலையங்கம்.

3. எழுத்தாளர்கள்  ம.நவீன், ஷோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரின் நூல்கள் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. வாசகரின் அடிப்படைச் சிந்தனை உரிமையைப் பறிக்கும் இச்செயலுக்கு எதிர்வினையாற்றும் கண்ணோட்டம். (செந்தூரன்)

4. கட்டுரைகள்: புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன? (ஸ்ரீநிவாசகோபாலன்)
புதுமைப்பித்தன் எழுதிய ‘விபரீத ஆசை’ கதை தொடர்பாக ரகுநாதன், சி.சு. செல்லப்பாமீது வைத்த குற்றச்சாட்டை மறுக்கும் கட்டுரை.

5. அங்கும் இங்குமாய் (களந்தை பீர்முகம்மது)
இந்து சமூகத்தை அடியொற்றி முஸ்லிம் சமூகத்துப் பெண்களும் பின்பற்றிய நடைமுறைக் கலாச்சார விசயங்களையும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்குமான இடைவெளியை அலசி ஆராயும் விரிவான கட்டுரை.

6. இந்திய வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா எழுதும் புதிய பத்தி ‘இன்றும் என்றும்’: 

நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப் (தமிழில்: மருதன்)
இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றுள்ள டிரம்பின் போர் நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராயும் கட்டுரை.

7. அஞ்சலி: ஆஷா போஸ்லே (ஜான் சுந்தர்)

அரவிந்தன் நினைவுகள்:

•         இறுதிப் ‘பயணம்’ (செந்தூரன் ஈஸ்வரநாதன்)

•         அன்பான அரவிந்தன் (வாஸந்தி)

•         இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன் (அம்பை)

•         சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர் (டி.எம். கிருஷ்ணா)

•         ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்? (கவிதா முரளிதரன்)

•         அரவிந்தனுக்கு நன்றி (திவாகர் ரங்கநாதன்)

•         என்னை ஆளாக்கிய ஆசிரியர்! (ச. கோபாலகிருஷ்ணன்)

8. சிறுகதை: மூடிய சாளரம் (எம். கோபாலகிருஷ்ணன்)

9. கவிதை: ஞா. தியாகராஜன்

10. பதிவுகள்:

• மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம் (பலராமன் சுப்புராஜ்)

ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சென்னை கவிக்கோ மன்றத்தில் காலச்சுவடு பதிப்பகம் சார்பாக நடந்த அரவிந்தன் நினைவேந்தல் நிகழ்வின் பதிவு.

• காதலரின் நாட்குறிப்பு (ந. சூரிய மூர்த்தி)

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் நூல் அறிமுக நிகழ்வின் பதிவு.

• நீலமும் வானமும் (கிருஷ்ண பிரபு)

பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் பிறந்த மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் நடத்திய வானம் கலைத் திருவிழா நிகழ்வின் பதிவு.

• நியூயார்க்கில் நவீனத் தமிழ் (எஸ். செந்தில்குமார்)

ஏப்ரல் 3, 4 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற வாழும் தமிழ் இலக்கிய விழா நிகழ்ச்சியின் பதிவு.

11. மதிப்புரை: ரித்விக் கட்டக் எனும் தேவதை (தியடோர் பாஸ்கரன்) மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல் (ம. சோனியா)

12. சுந்தர ராமசாமி 95: குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலை வாசிப்பது எப்படி? (ராஜன் குறை) ஒரு புளியமரத்தின் கதை இன்றும் பொருந்தும் ஆக்கம் (பொன்முகலி)

https://kalachuvadu.com/magazines

@followers Kannan Sundaram D.i. Aravindan TopFans Sukumaran Narayanan 

#காலச்சுவடு #kalachuvadu #tamilliterature #தமிழ்நூல்கள்
#FreedomOfExpression #readtoresist #SocialJustice #bookrecommendations #தமிழ்இலக்கியம் #tamilwriters #literarymagazine #நூல்கள் #அரவிந்தன் #இலக்கியவாசிப்பு #monthlymagazine #kalachuvadubooks #kavithaithoguppu #bookreaders #bookreview

கருத்துகள் இல்லை: