பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
என்கேழுந்தருவது இனியே.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
7 பிப்., 2010
திருநீற்றுப்பதிகம்-11:
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னனுடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம் நிறைவுற்றது.
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னனுடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம் நிறைவுற்றது.
6 பிப்., 2010
திருநீற்றுப்பதிகம்-10:
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்துந்தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் வாலவாயான் திருநீறே.
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்துந்தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் வாலவாயான் திருநீறே.
3 பிப்., 2010
இன்று ஒரு தகவல்-24: "ஆப்பிளின் 'ஐபேட்' (Apple's iPad)'"
'பெர்சனல் கம்ப்யூட்டர்' (Personal Computer), 'ஐபாட்' (iPod), 'ஐஃபோன்' (iPhone) என்று சாதனை மேல் சாதனை படைத்து , டிஜிட்டல் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமோர் சாதனை படைத்துள்ளது. இதன் புதிய சாதனை 'ஐபேட்' (iPad). மொபைல் ஃபோன், லேப்டாப் கம்ப்யூட்டர், மற்றும் இ-ரீடர் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியது 'ஐபேட்' . கிட்டத்தட்ட பத்து அங்குல திரை, மிகக் குறைந்த எடை, பத்து மணி நேரம் இயங்கும் பேட்டரி போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் செயல்வசதிகள் இருக்கின்றன! இதன் தற்போதைய விலை ரூபாயில் இருபத்து நாலாயிரம் முதல் நாற்பத்து ஒன்றாயிரம் வரை. 16 ஜிபி முதல் 64 ஜிபி வரை நினைவுத்திறன் உள்ள பல மாடல்கள் உள்ளன. இது இந்தியாவிற்கு எப்போது வருமோ தெரியவில்லை.
மேலும் தகவல்கள் அறிய:
The best way to experience the Web, Email, Photos, Video
iPad lesson: Apple is in control
http://www.salon.com/tech/htww/2010/01/28/apple_is_in_control.html
நன்றி: ஆப்பிள் நிறுவனம் மற்றும் சலோன்.காம்.
மேலும் தகவல்கள் அறிய:
The best way to experience the Web, Email, Photos, Video
http://www.apple.com/ipad/features/
iPad lesson: Apple is in control
http://www.salon.com/tech/htww/2010/01/28/apple_is_in_control.html
நன்றி: ஆப்பிள் நிறுவனம் மற்றும் சலோன்.காம்.
நலக்குறிப்புகள்-41: "கொசுக்களை ஒழிக்கும் கம்பூசியா மீன்கள்!"
தமிழகத்தில் சிக்குன்குன்யா, வைரஸ் காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்கள் பரவ, காரணமாக இருந்துவரும் கொசுக்களை அழிக்க சுருள், மேட், திரவம், கிரீம் என பலவகையான கொசுவிரட்டிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை.
இந்நிலையை மாற்ற, சுகாதாரத்துறையினர் 'கம்பூசியா' என்ற மீனை அறிமுகப்படுத்தினர். கடல் அல்லாத நீரில் மட்டுமே வளரும் இந்த மீன்கள், மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றை வீடுகளில் தண்ணீர் தேங்கும் தொட்டிகள், கிணறு, குட்டிகள், குளங்களில் விட்டால் அங்குள்ள கொசுக்களை உணவாக உட்கொள்ளும்.
இதனால், கொசு உற்பத்தி தடுக்கப்படுகிறது. இது உபயோகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை குறைந்து வருவதால் இம்மீன்களுக்கு தற்போது புது மவுசு ஏற்பட்டுள்ளது. ஓரிரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் மக்கள் இவற்றை வாங்கத் துவங்கி உள்ளனர். மற்ற மீன்களைப் போல் அல்லாமல் பிறக்கும்போதே குஞ்சாக வெளிவரும் இந்த மீன் ரகம், அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. கண்ட கண்ட ஆபத்தான இரசாயனப் பொருட்களை வங்கி, உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல், அனைவரும் இந்த மீன்களை வாங்கிப் பயன்படுத்தி கொசுத்தொல்லையைக் குறைக்கலாம். அரசும் இந்த மீன்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வழி செய்யவேண்டும்.
தகவல்: தினமலர், 3.2.2010
நன்றி: தினமலர், நாளிதழ்.

இன்றைய சிந்தனைக்கு-81:
நாம் வருந்தி வேண்டி அழைத்தாலும் நமக்கென்று வராத செல்வம் வருவதில்லை. ஆனால், நமக்கு உற்ற பொருள் நாம் விலகிப்போனாலும் நம்மை ஒருபோதும் நீங்குவதில்லை - அவ்வையார்
நன்றி: தினமலர் நாளிதழ், 3.2.2010
நன்றி: தினமலர் நாளிதழ், 3.2.2010
திருநீற்றுப்பதிகம்-9:
மாலோடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமது உண்டமிடற்றம் ஆலவாயான் திருநீறே.
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமது உண்டமிடற்றம் ஆலவாயான் திருநீறே.
2 பிப்., 2010
இன்றைய சிந்தனைக்கு-80:
எதிர்த்து நின்று போராடுங்கள். ஓர் அடி கூட முன் வைத்த காலை பின்வைக்காதீர்கள். எது வந்தாலும் போராடும் இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள் - சுவாமி விவேகானந்தர்.
எனக்குப் பிடித்த கவிதை-59: கவிஞர் ஸ்ரீரசாவின் கவிதை
வரிக்குதிரை ...
இயற்கையின் அழகிய
இருள் ஒளி வினோதம்...
இருட்குதிரைமேல்
இடப்பட்ட
ஒளிவரிகளா?
ஒளிக்குதிரைமேல்
இடப்பட்ட
இருள்வரிகளா?
கவிஞர் ஸ்ரீரசா அவர்களின் "கரித்துண்டுகள் ஒளிருங்காலம்" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து
நன்றி: கவிஞர் ஸ்ரீரசா

திருநீற்றுப்பதிகம்-8:
இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவண மாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவமாவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
பராவண மாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவமாவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)