14 பிப்., 2015

திருப்புகழ்-1: முருகன் துதி

அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்: முருகன் துதி

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
     ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
     குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
     வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
     ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

இன்று ஒரு தகவல்-46: நீங்கள் வாங்கும் மருந்து போலியா என அறிய:

நீங்கள் வாங்கும் மருந்து போலியா என அறிய:

மருந்து பாட்டில் அல்லது பெட்டியின் மேல் ஒன்பது இலக்க எண் (UNIQUE PRODUCT IDENTIFICATION CODE) இருக்கும். அந்த எண்ணை 9901099010 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் செய்யவும். பத்தே வினாடிகளில் அந்த மருந்தின் குழு எண், காலாவதி தேதி, தயாரிக்கும் கம்பெனியின் பெயர் (Batch Number, Expiry Date, Company Name) ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும். 

இந்த சேவையை வழங்குவோர்
PHARMASECURE.COM

நன்றி - PHARMASECURE.COM



தாயுமானவரின் பராபரக்கண்ணி-62:

நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்


காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே

நலக்குறிப்புகள்-92: அமிலத்தன்மை மிகுந்த உணவுகள்

அமிலத்தன்மை மிகுந்த உணவு வகைகளைப் பொதுவாக குறைத்துக்கொள்வது நல்லது. சில அமிலத்தன்மை மிகுந்த உணவுவகைகள்:

1.     எண்ணெயில் வறுத்தவை/பொரித்தவை
2.     காபி
3.     தேனீர்
4.     சீனி
5.     பருப்புகள்
6.     தானியங்கள்
7.     மாமிச உணவுவகைகள்
8.     அனைத்து இனிப்பு-காரப் பலகாரங்கள்
9.     மிட்டாய்கள்
10. சாக்லேட்டுகள்
11. டப்பாவில் அடைத்த் உணவுகள்
12. பேக்கரி உணவுகள்

ஆன்மீக சிந்தனை-61: ஸ்ரீ சத்ய சாய்பாபா

பஞ்சபூதங்களால் ஆன இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது.  அதன் தூய்மையைக் கெடுத்தால், நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடைவதுடன், மனமும் மாசடையும். இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாவோம்ஸ்ரீ சத்ய சாய்பாபா


இன்றைய சிந்தனைக்கு-188: மாலைமலர்

வெற்றியை நோக்கிப் பற.
பறக்க முடியாவிட்டால் ஓடு.
ஓட முடியாவிட்டால் நட.
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால்
எப்படியாவது நகர்ந்து கொண்டே இரு.

நன்றி - மாலைமலர்

9 பிப்., 2015

நலக்குறிப்புகள்-91: நிலக்கடலை


நீரழிவு நோயை தடுக்கும்:

உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்க உதவும். குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை (Osteoporosis) நோய் வராமல் தடுக்கும்.

பித்தப்பைக் கல்லைக் கரைக்கும்:


இதயம் காக்கும்:

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து  இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இது ஒரு மிகச் சிறந்த ஆண்டி-ஆக்சிடென்டாக (Antioxidant) திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் (Polyphenols) என்ற ஆண்டி ஆக்சிடென்ட் நோய்வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் செய்யும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். மூளை வளர்ச்சிக்கு பயன்படும்  நியாசின் என்ற விட்டமின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் மூளையை உற்சாகப்படுத்தும் செரடோனின் (Seratonin) இதில் உள்ளது. இது உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. 

கொழுப்பை குறைக்கும்:

மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு (HDL) நிலக்கடலையில் அதிகம் உள்ளது. இதில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது உடலுக்குத் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு (Mono Unsaturatsed Fat) உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு (Poly Unsaturated Fat) 16 கிராம் உள்ளது. இவை உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 (Omega-3) சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு உண்டு. 

Facebook-லிருந்து எடுத்த தகவல் சுருக்கம்.

நன்றி: Facebook மற்றும் www.facebook.com/puradsifm

ஆன்மீக சிந்தனை-60:

புகழ், செல்வம், பேரறிவுடன் திருப்பொலிவு, உண்மையான இன்பம், முக்தி ஆகியவற்றை விரும்புவோர் மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனத் துதிக்கவேண்டும் – அதிவீரராம பாண்டியன்

இன்றைய சிந்தனைக்கு-187:

வாழ்வில் தர்ம நெறிகளைக் கடைப்பிடிக்கத் தவறியவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்கிறான் – சாந்தானந்தர்