27 ஜன., 2020

குட்டிக்கதை : காரியம் ஆகணும்னா கழுதையானாலும் காலைப்பிடி

*கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...*

*இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..*

*எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்..கழுதையும் கத்தவில்லை..கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது*

*எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!*

*கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது....*

குட்டிக்கதை

மனைவி இறக்கும்போது, 
*அவருக்கு வயது 45 இருக்கும்*. 
உறவினர்கள், 
*நண்பர்கள்* 
அனைவரும் 
*அவரை* 
*மறுமணம்* 
செய்து கொள்ளுமாறு 
வற்புறுத்தியும், 
*அவரால்* 
*அதை ஏற்றுக்கொள்ள* 
*முடியவில்லை* .

என் மனைவி, 
*அவள் நினைவாக* 
எனக்கு 
*ஒரு மகனை* 
விட்டு சென்றிருக்கிறாள். 
*அவனை வளர்த்து* 
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*. 
அவன் சந்தோஷத்தில் 
*அகமகிழ்ந்து*, 
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது* 
எனக்கு போதும். 
*அவனுக்காக* 
*வாழ போகிறேன்*. 

இன்னொரு துணை 
*எனக்கு தேவையில்லை* 
என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது. 
மகன் வளர்ந்து 
பெரியவனானதும், 
தன் வீட்டையும், 
வியாபாரத்தையும் 
மகனிடம் 
எழுதி கொடுத்துவிட்டு 
ஓய்வு பெற்றார். 

மகனுக்கு திருமணமும் 
செய்து வைத்து, 
அவர்களுடனேயே 
தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது. 
ஒரு நாள் 
வழக்கத்துக்கு மாறாக, 
கொஞ்சம் 
சீக்கிரமாக 
காலை உணவு உண்ண, 
*மருமகளிடம்* 
ரொட்டியில் தடவ 
*வெண்ணெய் 
தருமாறு கேட்டார். 
*மருமகளோ* , 
*வெண்ணை* 
*தீர்ந்துவிட்டது* 
*என்று சொல்லி விட்டாள்*. 

மகன் 
அதை கேட்டுக் கொண்டு, 
தானும் உணவருந்த உட்கார, 
தகப்பன் வெறும் 
ரொட்டி துண்டை 
உண்டு விட்டு நகர்ந்தார். 

*மகன்* 
உணவருந்தும் போது, 
*மேஜையில்* 
*வெண்ணை* 
கொண்டு வந்து 
வைத்தாள் *மனைவி*. 
ஒன்றும் பேசாமல் , 
*மகன்* 
தன் வியாபாரத்துக்கு 
புறப்பட்டான். 
*அந்த வெண்ணையை* 
பற்றிய சிந்தனையே 
*அந்நாள் முழுதும்* 
அவன் எண்ணத்தில் 
*ஓடிக்கொண்டிருந்தது*.

மறுநாள் 
காலையில் 
தன் 
தகப்பனை அழைத்தான். 
அப்பா வாருங்கள் 
நாம் வக்கீலை 
பார்த்துவிட்டு 
வருவோம் என்றான். 
ஏன் எதற்காக 
என்று தகப்பன் கேட்க...

நானும் 
என் மனைவியும் 
வாடகை வீட்டுக்கு 
குடி போகிறோம். 
என் பெயரில் 
எழுதிய அனைத்தையும் , 
உங்கள் 
பெயருக்கே 
மாற்றி கொள்ளுங்கள். 

இந்த வியாபாரத்திலும் 
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன். 
மாதா மாதம் 
சம்பளம் வாங்கும் 
சராசரி 
தொழிலாளியாக 
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..

ஏன் 
இந்த திடீர் முடிவு?. 
இல்லை அப்பா 
*உங்கள் மதிப்பு* 
என்னவென்று 
*என் மனைவிக்கு* 
உணர்த்த வேண்டிய 
*கட்டாயம் வந்துவிட்டது*. 

*சாதாரண வெண்ணைக்காக* 
நீங்கள் கையேந்தும் 
*நிலை வரக்கூடாது*. 
ஒரு பொருளை 
பெறுவதில் 
உள்ள கஷ்டத்தை 
*அவள் உணர வேண்டும்*. 
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...

பெற்றவர்கள் 
பிள்ளைகளுக்கு 
ATM கார்டாக இருக்கலாம்.. 
ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார் 
(அடையாள) கார்டாக 
இருக்க வேண்டும் 
என்பதே 
இந்த கதையின் கருப்பொருள்.

பெற்றவர்களை 
புறக்கணிக்காதீர்கள். 
அவர்கள் இல்லாமல் 
உங்களுக்கு 
அடையாளம் என்பதே இல்லை .................

வாட்ஸ்அப்பில் பெற்றது 

நிகழ்ச்சிகள் : ஆதிவாசி திருவிழா

நன்றி : தினமலர் பட்டம் ஜனவரி 27, 2020

ஆன்மிக சிந்தனை

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: ஐயா, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன?*

✅ *பதில்:* இறைவன் என்னும் தத்துவம் எங்கும் நிறைந்துள்ள ஓர் பேராற்றல். அதனுடைய தன்மைகளில் இன்னொன்று அன்பு. அந்த அன்பு உங்கள் எண்ணம், சொல், செயல்களில் ஊடுருவி நிறைந்திருந்தால் அது தான் நீங்கள் இறைவனுக்குச் செய்யக்கூடிய கடமை. எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுங்கள். இறைவன் மகிழ்ச்சி அடைவான். 

ஏனெனில் அவன் அன்பும், கருணையுமாக அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ளான். அவனை மகிழ்விக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றில்லை. உடலும் குடலும் அற்ற இறைவனுக்கு வேறு ஒரு தேவையுமில்லை. பொருட்களைக் கொடுத்து அரூபமான இறைவனை மகிழ்விக்க நினைப்பது அறியாமையே.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
உறவு என்பது ஒரு புத்தகம். அதில் தவறு என்பது ஒரு பக்கம். ஒரு பக்கத்திற்காக முழு புத்தகத்தையே இழக்கக்கூடாது.                                                    

உங்கள் கவனத்திற்கு

LIC யில்
கேட்பாரற்று இருக்கும் 
*ஆறு லட்சம் கோடி* ரூபாயில்,
*(₹6,00,000,00000000)*
உங்கள் பணம்
அல்லது
நண்பரின்
பணமும் இருக்கு !
◆
அதை திரும்ப
வாங்கும்
வழியும் இருக்கு !
💝
நீங்க
கஷ்டப்பட்டு, 
உழைத்து சம்பாதித்த பணத்தை, 
எதிர்கால தேவைக்காக
LIC யில் பாலிசி எடுத்து, ஓரிரு தவணைத் தொகையும் செலுத்தி
இருப்பீர்கள் !
◆
சூழ்நிலை
காரணமாக,
பாலிசியை
கிரமப்படி செலுத்தாமல்,
காலாவதியாகி
இருக்கும் ! 
◆
இன்சூரன்ஸ்
நிறுவனத்திற்கு
நீங்கள் செலுத்திய 
சில மாத பிரிமியம்
தொகையை
[ சில ஆயிரம் ரூபாயை ]
எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும்
திருப்பிக் கொடுப்பது
இல்லை !
◆
இந்த வகையில்
LIC உள்ளிட்ட இன்சூரன்ஸ்
நிறுவனங்களில்
ஆறு லட்சம் கோடி
ரூபாய்க்கும் மேலே முடங்கிக்
கிடக்கிறது !
◆
எந்த வகை
பாலிசியாக இருந்தாலும், 
அதற்குரிய பாண்டை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம்,
 30 January  2020  (30-01-2020) இறுதிக்குள்* ஒப்படைத்து, 
நீங்கள் 
செலுத்திய பணத்தை, பேங்க் வட்டியுடன் பெற்றுக் கொள்ளும்படி,
IRDA அறிக்கை
அறிக்கை வெளியிட்டுள்ளது !
◆
பணத்தை 
திருப்பிக் கொடுக்காத
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது, பாலிசிதாரர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதியலாம் எனவும், அறிவுறுத்தி  உள்ளது !
◆
தயவுசெய்து இந்தத் தகவலை *மற்றவர்களும் பயன்படும்படி இரண்டு மூன்று முறை WhatsApp, FaceBook Groupsல் பகிருங்கள்....*
◆
இதில், வயித்தெரிச்சலான விசயம் என்னவென்றால், காலாவதியான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பணமே 
ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 
LIC நிறுவனத்தில் மட்டுமே உள்ளதாம் ! 
மற்ற இன்சூரன்ஸ்
கம்பெனிகளில்
முடங்கியுள்ள 
பணத்தை 
சேர்த்தால்?
இன்னும் ஒரு கோடி
தேறும் !
◆
பொது நலன் கருதி 
இத் தகவலை வெளியிடுவோர் : 
Sanctuary Legal Bureau 
( A Law Firm ) 
Ph (Enquiry) : 
E-Mail: sanctuarylegal@
gmail.com  mob: 6379577902
Web : www.sanctuarylegal.in
சுதந்திர இந்தியா கொண்டாட்டமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை, அதே வேளையில் இனி நாம் யாரையும் குறை சொல்லிக்கொண்டிருக்க முடியாது, பிரிட்டிஷாரை திட்டி தப்பித்துக்கொள்ள முடியாது, வரப்போகும் காலங்களில் நடப்பவை அனைத்துக்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும் 

- பாபாசாஹேப் அம்பேத்கர்

செகாவின் நாய்கள்

From s.raa's website
செகாவின் நாய்கள்

புகழ்பெற்ற எழுத்தாளரான ஆன்டன் செகாவிற்கு ரஷ்யாவில் நினைவில்லமும் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பு செகாவ் வளர்ந்த டச்ஷண்ட் நாய்களுக்கும் கூட நினைவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

செகாவ் கதைகளில் வரும் நாய்கள் மறக்கமுடியாதவை. The Lady with the Dog” கதையில் வரும் அன்னா ஒரு வெள்ளை நாய் வைத்திருக்கிறாள். இந்த நாய் அவளது அப்பாவித்தனத்தையும் இளமையையும் குறிக்கும் குறியீடு போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது.

கஷ்டங்கா என்ற சிறுகதையும் நாயைப் பற்றியதே. இக்கதையில் வரும் நாய் ஒரு தச்சருக்குச் சொந்தமானது, அவர் ஒரு நாள் கஷ்டங்காவை வெளியே அழைத்துச் செல்கிறார்,  வழியில் ஒரு இராணுவ அணிவகுப்பின் குழப்பத்தில் கஷ்டங்காவைத் தொலைத்துவிடுகிறார். போக்கிடம் தெரியாமல் அலையும் கஷ்டங்காவை ஒருவன் மீட்டு உணவளித்துத் தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறான். வேடிக்கை நிகழ்ச்சி நடத்தும் அவனிடம் பெயர் மாற்றப்பட்டுக் கஷ்டங்கா புதிய சூழலில் வாழ ஆரம்பிக்கிறது.
அதற்கு விசேச பயிற்சிகள் தந்து விசித்திர நாயாக அடையாளப்படுத்துகிறான். புதிய வாழ்க்கையைக் கஷ்டங்கா ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முடிவில் தனது பழைய எஜமானனை அடையாளம் கண்டு அவரிடமே போய்ச் சேர்ந்துவிடுகிறது கஷ்டங்கா. இக்கதையில் நாயின் விசுவாசத்தை, இயல்பை செகாவ் சிறப்பாக எழுதியிருப்பார்.
செகாவ் மெலிகோவோவில் வாழ்ந்த போது ப்ரோம் மற்றும் கினா என்ற இரண்டு நாய்களை வளர்த்தார். அந்த நாய்களின் நினைவாகச் சிற்பி அலெக்சாண்டர் ரோஷ்னிகோவ் இந்தச் சிற்பங்களைச் செய்துள்ளார்
செக்கோவின் நாய்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசித்த நாடக ஆசிரியர் ஆசிரியர் நிகோலாய் லெய்கின் வளர்த்த டச்ஷண்ட் நாயின் குட்டிகளாகும். இரண்டு நாய்க்குட்டிகளையும் அவர் செகாவிற்குப் பரிசாக அளித்தார். இந்த நாய்க்குட்டிகளுக்குப் பெயர் வைத்தவர் செகாவின் சகோதரி மரியா.

ப்ரோம் மற்றும் கினா, கறுப்பு மற்றும் சிவப்பு நிறமுடையதாக இருந்தன. கினாவுக்குக் குறுகிய கால்கள் இருந்தன, வயிறு கிட்டத்தட்டத் தரையில் இழுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளின் மாலையும் கினா செகாவும் நாய்களுடன் அரை மணி நேரம் பேசுவார், விளையாடுவார். அந்த நேரத்தில் கினா அவரது கால்களை ஆசையுடன் நக்குவது வழக்கம்..
கினா மற்றும் ப்ரோம் ஆகியவற்றின் சிற்பம் செய்யப்பட்ட பிறகு இங்கே வரும் பொதுமக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற நாய்களின் மூக்கைத் தடவுகிறார்கள். நாய்களின் முன்னால் உள்ள தொப்பியில் நாணயங்களைப் போட்டுச் செல்கிறார்கள்.

செகாவைக் கொண்டாடுவதன் அடையாளமாக அவரது நேசத்திற்குரிய நாய்களுக்குச் சிலை செய்து வைத்திருப்பது ரஷ்யப் பண்பாட்டின் சிறப்பு என்றே சொல்வேன்.

நன்றி: திரு எஸ்ரா,  திருமதி எஸ்ரா மற்றும் முகநூல்