பல ஆண்டுகளாக வயிற்றுக்கோளாறு, மார்பின் இடது பக்கத்தில் வலியும், கழுத்து வலியும் இருந்தது. பல ஆயிரக்கணக்கில் மருந்து, மாத்திரைகளுக்கும், என்டோஸ்கோபி ஆய்வுக்கும் செலவு செய்தும் பயனில்லை. 26-வது நலவாழ்வு முகாமில் கலந்துகொண்டு, குடிநீர் சிகிச்சை, அஹிம்சை எனிமா, நின்று-அமர்ந்து-படுத்து செய்யும் ஆசனங்கள் கற்றேன். எடை எழுபது கிலோவிலிருந்து அறுபது கிலோவாகக் குறைந்தது.
அதிகாலையில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை, அருகம்புல் அவற்றுள் ஒன்றின் சாறு, காலை-மாலை தேங்காய் பழங்கள், மதியம் வழக்கமான சமைத்த உணவு அளவாகச் சாப்பிட்டேன்.
வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, கழுத்துவலி எல்லாம் மறைந்துவிட்டன.
- திரு க.அழகன் (வயது 43), 'இயற்கை மருத்துவம்' மாத இதழ் (ஆகஸ்ட் 2009).
நன்றி: திரு க.அழகன் மற்றும் 'இயற்கை மருத்துவம்' மாத இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக