அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தா கோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதை! அறிவுறாய்
அம்பர மூடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக