23 அக்., 2009

நலக்குறிப்புகள்-40: பா‌ட்டி சொ‌ன்ன ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்

இருமல், அஜீரணம், பல்வலி, வாந்தி போன்றவற்றிற்கு பாட்டி சொன்ன எளிதான வைத்தியம் தெரிந்துகொள்ள கீழே 'க்ளிக்' செய்யவும்.

Home Remedies | Health Care | பா‌ட்டி சொ‌ன்ன ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்

நன்றி: "வெப்துனியா".

22 அக்., 2009

இன்றைய சிந்தனைக்கு-82:

அன்புநீர் வார்த்தால் அருள் மலரும்; மாசற்ற அன்பினால் மனம் பரமனிடம் ஒன்றுபடும்; 'நான், எனது' என்னும் தனியகந்தை ஒழியும்; சித்தம் நிலைக்கும்; அருளுணர்வாகும்.

- யோகி சுத்தானந்த பாரதியார் (யோகசித்தி)

செய்திகள்-5: தமிழர்களின் வாழ்வோடு விளையாடுகிறது ஸ்ரீலங்கா அரசு: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

SL breaks all promises on resettlement of IDPs | தமிழர்களின் வாழ்வோடு விளையாடுகிறது சிறிலங்க அரசு: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாற்று

இச்செய்தியை முழுமையாக வாசிக்க மேலே 'க்ளிக்' செய்யவும்.

நன்றி: Webduniya.com.

21 அக்., 2009

சிந்தனைகள்-2: "பிறந்தநாள்!"

இன்று அக்டோபர் 21. அறுபது ஆண்டுகளைத் தாண்டி, அறுபத்து ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். பெருமைப்படவோ, கொண்டாடவோ எதுவுமில்லைதான்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது குழந்தைகளுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தானா?

பரவாயில்லை, சந்தோஷப்படும்படி ஏதாவது கிடைக்கிறதா என்று விக்கிப்பீடியாவைத் (Wikipedia.com) திறந்தேன். அக்டோபர் 21-ஐத் தேடினேன். அடேயப்பா, எவ்வளவு தகவல்கள்! வரலாற்றில் அக்டோபர் 21-ம் தேதி நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்!! அன்று பிறந்த, இறந்த பெரிய மனிதர்களின் பட்டியல்.

நான் பிறந்த அதே வருடம், அதே மாதம், அதே தேதி - அக்டோபர் 21, 1949 - அன்று பிறந்தவர் இஸ்ரேல் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகூ(Benjamin Netanyahu).

அக்டோபர் 21 அன்று பிறந்த மற்ற சில வி.ஐ.பி.க்கள் மட்டும்:

ஜப்பானியப் பேரரசர் ஹிகஷியாமா (Emperor Higashiyama) - 1675
ஆங்கிலக் கவியரசர் சாமுவல் டைலர் காலரிட்ஜ் (Samuel Taylor Coleridge) - 1772
நோபல் பரிசை நிறுவிய ஆலஃப்ரட் நோபல் (Alfred Nobel) - 1833
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப் பாய்காட் (Geoff Boycott) - 1940

வெப்துனியா (Webduniya.com) செய்தியிலிருந்து அறிந்துகொண்ட ஒரு செய்தி - தமிழகத்தின் ஆளுநர் மேதகு சுர்ஜீத் சிங் பர்னாலா தன்னுடைய எண்பத்தைந்தாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

1969 அக்டோபர் 21 அன்று அமெரிக்க எழுத்தாளர் ஜேக் கெரொவ்வாக் (Jack Kerouac) மறைந்தார்.

அக்டோபர் 21, இங்கிலாந்தில் 'ஆப்பிள் தினமாகக்' (Apple Day) கொண்டாடப் படுகிறது.

இதெல்லாம் மனதிற்கு உற்சாகம் தருகிறது. நாமும் வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும், சாதிப்போம் என்ற நம்பிக்கையும் தருகிறது.

படித்து, கேட்டு, சிந்தித்து நான் உணர்ந்த மகத்தான உண்மைகளுள் சில: நாம் யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லை; நம் எல்லோருள்ளும் அளப்பரிய ஆற்றல், மகத்தான சக்தி உறைந்துள்ளது. மனதை ஒருமுகப் படுத்தி, நம்முடைய தனித்திறமை என்ன, நம்முடைய வாழ்வின் லட்சியம் எது என்பதில் தெளிவு பெற்று, பின் அந்த ஆற்றலைக் கொண்டு, நம்முடைய லட்சியத்தை அடையப் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்; முழுமை பெறுதல் திண்ணம். தியானம், சுவாசப் பயிற்சிகள், யோகா போன்றவை இதற்கு உறுதுணையாக உதவும். மனதைத் தளரவிடாது, விடாமுயற்சியுடன் முயன்றுதான் பார்ப்போமே. It is never too late!

அடுத்து ஒரு சில வினாடியில், எல்லாத் தகவல்களையும் இலவசமாக அள்ளித்தரும் விக்கிப்பீடியாவை நினைத்து பிரமிக்கிறேன். அதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு விஷயங்கள் விக்கிபீடியாவிலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்! விக்கிப்பீடியா, உனக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! வாழ்க நீ!! வளர்க நின் தொண்டு!!!

நன்றி: Wikipedia & Webduniya.

செய்திகள்-4: கல்விக் கடனுக்கு பிணை தேவையில்லை- ப.சிதம்பரம்

கல்விக் கடனுக்கு பிணை தேவையில்லை- ப. சிதம்பரம்

உயர்கல்வி பயிலும்/பயில விரும்பும் மாணவர்களுக்கு இனிப்பான செய்தி. செய்தியை முழுமையாக வாசிக்க மேலே 'க்ளிக்' செய்யவும்.

நன்றி: Webduniya.com.

செய்திகள்-3: வரதட்சணை எப்போது துவங்கியது?

வரதட்சணை எப்போது துவங்கியது?

சுவையான தகவல் நிறைந்த இச்செய்தியை வாசிக்க மேலே 'க்ளிக்' செய்யவும்.

நன்றி: Webduniya.com.

செய்திகள்-2: த‌மி‌ழ் இளைஞ‌ர்களை சு‌ட்டு‌க் கொ‌ல்லு‌ம் வீடியோ ஆதார‌ம் உ‌ண்மையே - ஆ‌ய்‌வி‌ல் உறு‌தி

Tamil youths killing video is original | த‌மி‌ழ் இளைஞ‌ர்களை சு‌ட்டு‌க் கொ‌ல்லு‌ம் வீடியோ ஆதார‌ம் உ‌ண்மையே - ஆ‌ய்‌வி‌ல் உறு‌தி

வெப்துனியாவில் வெளியான கட்டுரையை முழுமையாக வாசிக்க மேலே 'க்ளிக்' செய்யவும்.

நன்றி: Webduniya.com.

நலக்குறிப்புகள்-39: வாகை மரம்

Vaagai Maram | Home Remedies | தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம்

வாகை மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய மேலே 'க்ளிக்' செய்யவும்.

நன்றி: Webduniya.com.

18 அக்., 2009

தீபாவளித் திருநாள்

ஸ்ரீ கொல்லன் காளி அம்மன்

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்

நேற்று தீபாவளி. நாடெங்கும் நரகாசுரர்கள். ஒரு நரகாசுரன் அழிந்தால் ஓராயிரம் நரகாசுரர்கள் முளைக்கின்றனர். விஷம்போல் ஏறி, விண்ணைத்தொட்டுவிட்ட விலைவாசி. இதில் எதைக் கொண்டாடுவது?

உற்சாகமும் கொண்டாட்டமும் குழந்தைகளுக்கு மட்டும்தான் போலிருக்கிறது. குழந்தைகளைப் பார்த்து நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

சிறுவயதிலிருந்தே எனக்கும் தீபாவளிக்கும் ஏழாம் பொருத்தம்தான். என் அம்மாவின் பாஷையில் சொல்வதானால் என் உடம்பு 'கொணக்கிரும்'. 'மூட் அவுட்' ஆகிவிடும். இந்த லட்சணத்தில் நான் பிறந்தது ஒரு தீபாவளி தினத்தன்று! நேற்றைய தீபாவளி என்னுடைய அறுபத்தொன்றாவது தீபாவளி.

நேற்று என்னமோ கொஞ்சம் பரவாயில்லை. ஸ்ரீ கொல்லன் காளி அம்மன் கோவிலுக்கும், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தேன். மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

என் வாழ்வில் இன்னும் எத்தனை தீபாவளிகள் வருமோ தெரியவில்லை. பார்க்கலாம்.

வளமிகு காடுகள் வாவென அழைக்கும்
ஆயினும் எனக்கோ ஆயிரம் கடமைகள்
துயில் கொளுமுன் முடித்திட வேண்டும்
தொலைவோ பலகல் நடந்திட வேண்டும்.

17 அக்., 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும்
உளம்நிறைந்த
,
அன்பான
,
இனிய

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்
சூரி