Tamil youths killing video is original | தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொல்லும் வீடியோ ஆதாரம் உண்மையே - ஆய்வில் உறுதி
வெப்துனியாவில் வெளியான கட்டுரையை முழுமையாக வாசிக்க மேலே 'க்ளிக்' செய்யவும்.
நன்றி: Webduniya.com.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
21 அக்., 2009
நலக்குறிப்புகள்-39: வாகை மரம்
Vaagai Maram | Home Remedies | தெரிந்து கொள்ள வேண்டிய கை வைத்தியம்
வாகை மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய மேலே 'க்ளிக்' செய்யவும்.
நன்றி: Webduniya.com.
வாகை மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய மேலே 'க்ளிக்' செய்யவும்.
நன்றி: Webduniya.com.
18 அக்., 2009
தீபாவளித் திருநாள்
நேற்று தீபாவளி. நாடெங்கும் நரகாசுரர்கள். ஒரு நரகாசுரன் அழிந்தால் ஓராயிரம் நரகாசுரர்கள் முளைக்கின்றனர். விஷம்போல் ஏறி, விண்ணைத்தொட்டுவிட்ட விலைவாசி. இதில் எதைக் கொண்டாடுவது?
உற்சாகமும் கொண்டாட்டமும் குழந்தைகளுக்கு மட்டும்தான் போலிருக்கிறது. குழந்தைகளைப் பார்த்து நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.
சிறுவயதிலிருந்தே எனக்கும் தீபாவளிக்கும் ஏழாம் பொருத்தம்தான். என் அம்மாவின் பாஷையில் சொல்வதானால் என் உடம்பு 'கொணக்கிரும்'. 'மூட் அவுட்' ஆகிவிடும். இந்த லட்சணத்தில் நான் பிறந்தது ஒரு தீபாவளி தினத்தன்று! நேற்றைய தீபாவளி என்னுடைய அறுபத்தொன்றாவது தீபாவளி.
நேற்று என்னமோ கொஞ்சம் பரவாயில்லை. ஸ்ரீ கொல்லன் காளி அம்மன் கோவிலுக்கும், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தேன். மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
என் வாழ்வில் இன்னும் எத்தனை தீபாவளிகள் வருமோ தெரியவில்லை. பார்க்கலாம்.
வளமிகு காடுகள் வாவென அழைக்கும்
ஆயினும் எனக்கோ ஆயிரம் கடமைகள்
துயில் கொளுமுன் முடித்திட வேண்டும்
தொலைவோ பலகல் நடந்திட வேண்டும்.

17 அக்., 2009
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும்
உளம்நிறைந்த,
அன்பான,
இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
சூரி
உளம்நிறைந்த,
அன்பான,
இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
சூரி
14 அக்., 2009
நலக் குறிப்புகள்-38: "தலை முடி உதிரக் காரணம் என்ன?"
தலைமுடி உதிரக் காரணங்களையும், தவிர்க்கும் ஆலோசனைகளையும் தமிழில் வாசிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்:
Hair Falling Problem
Shared via AddThis
நன்றி: 'Webdunia.com' & 'AddThis'
Hair Falling Problem
Shared via AddThis
நன்றி: 'Webdunia.com' & 'AddThis'
கேள்வியும் பதிலும் -28: இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி
அவசியம் படிக்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.
தமிழில் அதை வாசிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்:
Relationship between Human & Nature - Madha Amirthananthamayi
Shared via AddThis
நன்றி: 'Webdunia.com' & 'AddThis'
தமிழில் அதை வாசிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்:
Relationship between Human & Nature - Madha Amirthananthamayi
Shared via AddThis
நன்றி: 'Webdunia.com' & 'AddThis'
செய்திகள்-1: வன்னி முகாம்களில் மனிதப் பேரழிவு அபாயம்
தமிழில் செய்தியை வாசிக்க கீழே 'க்ளிக்' செய்யவும்:
Vanni camps face humanitarian catastrophe- says Amnesty |
Shared via AddThis
Vanni camps face humanitarian catastrophe- says Amnesty |
Shared via AddThis
13 அக்., 2009
பாரதிதாசன் கவிதைகள்-12:
அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே
இமையாது நோக்கினான் முழுநி லாவை.
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!
சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி
அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தால் அமுத வள்ளி.
'புரட்சிக்கவியிலிருந்து' ஒரு சிறு பகுதி.

எனக்குப் பிடித்த கவிதை-58: முக்கூடற்பள்ளிலிருந்து
பங்கயம் தலைநீட்டிக் குரம்பினில்
பச்சைஇஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெல்லத் தொடுமன்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்கதிர்ச்செந்நெல்
அளாவி நிற்கும் செந்நெல்லும் அப்பால்
செங்கரும்புக் கைதரும் போல்வளர்
சீவலமங்கைத் தென்கரை நாடே.
- முக்கூடற்பள்ளு
பச்சைஇஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெல்லத் தொடுமன்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்கதிர்ச்செந்நெல்
அளாவி நிற்கும் செந்நெல்லும் அப்பால்
செங்கரும்புக் கைதரும் போல்வளர்
சீவலமங்கைத் தென்கரை நாடே.
- முக்கூடற்பள்ளு
கருத்துக்கள்-15: "பூமியையே கொடுத்தாலும்..."
தமிழனை பெருமையாகப் பேசும்போது, சிலப்பதிகாரத்தில், பாண்டியன் நெடுஞ்செழியன், தன் நீதி தவறிய தீர்ப்பை உணர்ந்ததும் உயிரை விடுகிறான்; தனது மகன், பசுங்கன்றை கொன்றதற்கு தண்டனையாக, தன் மகனையே தேர் சக்கரத்தால் ஏற்றிக்கொல்கிறான் சோழ மன்னன் என்று பெருமைப்படுகிறோம்.
ஆனால், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் தலித்தாக இருப்பதால், உயர் ஜாதியினர் குற்றம் சுமத்துவதாக தி.க. தலைவர் வீரமணி சொல்கிறார்.
சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதை விட்டு, ஜாதிப் பிரச்னையை கூறலாமா? அவருடைய வாதத்தையே ஏற்றாலும், தலித்துகள் ஊழல் செய்தால் தவறில்லையா? ஜாதியை, மதத்தை, மூடப்பழக்கத்தை ஒழிப்பேன் என்ற கொள்கை இதுதானா?
'நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் , ஊழல் செய்ய வேண்டியதில்லை' என்கிறார் நீதிபதி தினகரன். இந்தியாவில் பெரிய பணக்காரர் அம்பானி மகன்கள் சொத்துச் சண்டை நீதி மன்றம் வரை சென்றுள்ளது. சத்யம் ஸாஃப்ட்வேர் புகழ் ராமலிங்க ராஜு, சம்பளம் போதாமலா 8,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தார்?
பேராசை என்று வந்துவிட்டால், பூமியையே முழுவதுமாகக் கொடுத்தாலும், பக்கத்திலுள்ள துணைக்கோள் சந்திரனையும் கேட்பர். நீதிபதியானாலும், நீதியைத் தான் முழுவதும் நாட வேண்டும்.
- ரா.முத்தையா, சென்னை, 'தினமலர்', மதுரை, 8.10.2009.
நன்றி: திரு ரா.முத்தையா & தினமலர்.
முக்கிய பின்குறிப்பு:
---------------------------
இது தொடர்பாக 'இந்து' ஆங்கில நாளிதழின் (அக்டோபர் 11, 2009) முதல் பக்கத்தில் வெளியான செய்தியிலிருந்து:-
திருத்தணி தாலுகாவிலுள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் மட்டும் நீதிபதி தினகரன் அவர்கள் பெயரில் கிட்டத்தட்ட ஐந்நூறு ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையின்படி 197 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமென்றும், இதில் நான்கு வகையான அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி தினகரன் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு அவர் ஏரி, குளம் குட்டைகள், கிராமப் பொது நடைபாதைகள் மற்றும் அவரது பட்டா நிலத்திற்கு அருகிலுள்ள பழைய கால மண்கோட்டை ஆகியவற்றை ஆக்கிரமிப்புச் செய்துள்ளார் என்பதாகும்.
பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புச் செய்யப்பட நிலத்தைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றும் முயற்சியை, அரசு அதிகாரிகள் விரைந்து சென்று முறியடித்துள்ளனர். அப்போது அவர்களிடம் நீதிபதி தினகரன் அவர்கள் பேசுவதாகக் கூறி, மொபைல் ஃபோனில் மிரட்டல் விடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
நன்றி: "இந்து" நாளிதழ்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)